பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. திருவள்ளுவர் கூறிய பொருட்செல்வம்

உலகத்திலே மக்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பொருட் செல்வம் இன்றியமையாதது ஆகும். பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் மனிதவாழ்க்கைக்குப் பொருள்வேண்டியிருக்கிறது. இனி நல்வாழ்வு வாழ்வதற்குக் காரணமாயிருப்பது பொருள். பொருள் இல்லாதவனுக்கு உலக வாழ்வு, நல்வாழ்வு, இனிய வாழ்வு இல்லை; இல்லை; இல்லை. 'பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை' என்பது திருவள்ளுவர் பொய்யா மொழி. பணம் இல்லாதவன் பிணம். பொருள் அல்லவரையும் பொருளாகச் செய்யும் செல்வப்பொருள் அல்லாமல் வேறுபொருள் இல்லை. இல்லாரை எல்லாரும் எள்ளுவதும், செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வதும் உலகத்திலே கண்கூடாகக் காணப்படும் உண்மை நிகழ்ச்சி. பொருளுடையவர், தாம் செய்வதற்கு எண்ணிய செயல்கள் தட்டுத்தடையின்றி இனிது முடிகின்றன. பொருள் இல்லாதவர் செய்துமுடிக்க எண்ணிய செயல்கள் கைகூடாமல் போகின்றன. பொருள் என்னும் பொய்யாவிளக்கம், இருள் அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. அம்மட்டோ? குன்றேறியானைப் போர்கண்டற்றால், தன் கைத்து ஒன்று உண்டாகச் செய்வான் வினை. ஆகவே, செய்கபொருளை என்று ஆணையிடுகிறார் திருவள்ளுவர். பொருளை ஈட்டுக; ஈட்டுக; ஈட்டுக.

செல்வம் என்பது பணம் மட்டும் அன்று; பொன்னும் வெள்ளியும் மாத்திரம் அன்று. வீடு வாசல், தோட்டம் துரவு, நிலவுலம், காணி பூமி, ஆடு மாடு, உண்டி உடை, துணி மணி, தானிய தவசம் முதலிய எல்லாம் செல்வப்பொருளாகும். இவை எல்லாம் வாழ்க்கைக்கு வேண்டப் படுகின்றன. ஆகவே தான், தமிழன் செல்வத்திற்குப் பொருள் என்று பெயர்கொடுத்தான். ஆயினும், ஆயினும், எல்லாப் எல்லாப் பொருள்களையும் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பது பணம். ஆகவே, பணத்தை ஈட்ட வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும்.

செய்க பொருளை என்று திருவள்ளுவர் அழுத்தந்திருந்தமாகக் கூறிவிட்டபடியினாலே, எப்படியாவது எந்தவழியிலாவது பொருளைத் * செந்தமிழ்ச்செல்வி, 23:11, 1948.