பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

220

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

பொருளைத் தேடுக என்று வற்புறுத்துகிறார். ஏனைய செயல்களுக்கும் ஊக்கமும் முயற்சியும் எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வாறே, பொருள் தேடுவதிலும் ஊக்கமும் முயற்சியும் வேண்டும் என்கிறார். முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்'. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை'. 'மடியுளாள் மாமுகடி என்ப, மடியிலான் தாளுளாள் தாமரை யினாள்’. ‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி மெய்வருந்தக் கூலிதரும்' ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்றுபவர். அரியவென்றாகாத இல்லை, பொச்சாவாக் கருவியாற் போற்றிச்செயின். மடியுடையான் மாண்பயன் எய்தல், அரிது. உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம் என்று இவ்வாறெல்லாம் ஊக்கம் ஊட்டுகின்றார் திருவள்ளுவர்.

பொருள் ஈட்டும் துறையில் இறங்கியவர்களுக்கு முதல் வேண்டும். முதலிலார்க்கு ஊதியம் இல்லை என்று திருவள்ளுவர் உரைக்கிறார். அதனோடு, ஓர் எச்சரிக்கை கொடுக்கிறார். அவ்வெச் சரிக்கை யாது? ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடையார் என்பதுதான் அது. இதனை ஒவ்வொருவரும் பொன்னேபோல் போற்றி மனத்துட் கொள்ள வேண்டும்.

பிறகு, ஈட்டிய பொருளைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்கிறார். பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை என்பது அவர் பொன்மொழி. அற்றேம் என்று அல்லற்படுபவோ, பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர்? என்று கேட்கிறார். மேலும், அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலஇல்லாகித் தோன்றாக் கெடும் என்று எச்சரிக்கை செய்கிறார். ஆகவே, ஊதாரித்தனமாக வீண்செலவு செய்யாமலும், தகுதிக்கு மேற்பட்ட ஆகுலச் (டம்பச்) செலவு செய்யாமலும், பொருளின் அளவுக்கு ஏற்ற முறையில் அளவறிந்து வாழ்க என்று அறிவுறுத்துகிறார்.

மேலும், பொருள் அழிவுக்குக் காரணமாகவுள்ள சிலவற்றைக் கூறி அவற்றைச் செய்யாதே என்று அறிவுறுத்துகிறார். பொருட் பெண்டிர் தொடர்பும், கள்ளுண்டலும், சூதாடலும் பொருள் அழிவுக்குக் காரணங்கள் என்று கூறுகிறார். இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப்பட்டார் தொடர்பு என்கிறார். (இதனைப் பொருட்பெண்டிர், கள்ளுண்ணாமை, சூது என்னும் அதிகாரங்களில் விளக்கியுள்ளார்.)