பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

221

பொருளைத் தேடுகிறவர்களுக்கும். தேடிய பொருளைப் போற்று கிறவர்களுக்கும் இவை கூடா என்று கூறுகிறார். அன்றியும், மனைவி சொற்படிகேட்டு அவளுக்கு ஏவல் செய்யும் சுய அறிவு அற்றவ னுக்கும் பொருள் செய்யும் முயற்சியும் ஏனைய நற்செயல்களும் செய்ய இயலாது என்கிறார்.

பின்னர், ஈட்டிப் போற்றிய பொருளை அறம் செய்க என்று திருவள்ளுவர் கூறுகிறார். அஃதாவது, ஏழைமக்களுக்கு, இல்லாதவர் களுக்குப் பொருளை உதவவேண்டும் என்கிறார். என்னை? போற்றுக பொருளை, பொருளாட்சி போற்றாதார்க்கில்லை என்று கூறிய வள்ளுவர், அதனைத் தானதருமம் செய்யவேண்டும் என்கிறாரே! தான தருமம் செய்வத பொருளைப் போற்றுவது ஆகுமா? செல்வம் சென்று விடும் அல்வா? என்ற கேள்விகள் எழுகின்றன. பொருளைத் தேடிச் சேர்ப்பது அதனைச் சேமித்துப் பாதுகாத்தற்காக அல்ல; அதனைத் தக்கவழியில் பயன்படுத்துதற்கே. மனிதவாழ்க்கை மிருகவாழ்க்கை அன்று. தானும் மற்றவர்களும் நன்கு வாழ்வதற்கு ஒவ்வொருவரும் உதவி செய்துகொள்வதே மக்கள் சமூகத்தின் உயரிய பண்பி- பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலைமையான அறம். பகுத்துண்டு வாழவேண்டும் என்பதைத் திருவள்ளுவர் திருக்குறளில் பல இடங்களில் வற்புறுத்திக் கூறுகிறார். பொருளாதாரத்துறையிலே மக்கள் ஒரு தன்மைத்தாக இருக்கவில்லை. பலதரமாகக் காணப்படுகின்றனர். இவர்களை முக்கியமாக நான்கு பிரிவாகப் பிரிக்கிறார் திருவள்ளுவர். இரவலர், தமது வாழ்க்கைக்கு மட்டும் போதுமான வருவாயுடையவர், சிறிதுபொருள் உள்ளவர், பெருஞ்செல்வர் என நான்கு வகையினர். இந்நான்கு வகையினரைத் திருவள்ளுவர் குறிப்பாகக் கூறியுள்ளார். திருவள்ளுவர் குறிப்பாகக் கூறிப்போந்த இதனை, திருக்குறள் உரையாசிரியர்களில் ஒருவராகிய மணக்குடவர் தமது உரையிலே நன்கெடுத்தோதுகிறார். திருக்குறள் இல்லற இயலின் தொடக்கத்தில் மணக்குடவர் கூறும் விளக்கத்தில் இதனைக் காணலாம். அதுவருமாறு:

66

காருகத்த (இல்லற) இலக்கணங் கூறுவார் நல்கூர்ந்தார், நல்குரவினீங்கினார், செல்வர், வள்ளியோர் என்னும் நால்வரினும் அன்புடைமை முதலாக ஒழுக்கமுடைமை ஈறாக நல்கூர்ந்தாரார் செய்யப்படுவன எழும், பிறனில் விழையாமை முதலாகத் தீவினை அச்சம் ஈறாக இவராற் றவிரப்படுவன ஏழும் பதினான்கதிகாரத்தாற்