பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

கூறி, இவற்றோடுங்கூட ஒப்புரவறிதல் நல்குரவினீங்கினாரால் செய்யப்படும் என்று கூறி, இவற்றோடுங்கூட ஈதல்செல்வரால் செய்யப்படுமாறு கூறி, இவற்றோடுங் கூடப் புகழ்வள்ளியோரால் செய்யப்படுமென்று கூறினாராகக் கொள்ளப்படும்.

6

و,

இவ்வாறு பொருளாதாரத் துறைப்படி மக்களை நான்கு பிரிவாகப் பிரிக்கிறார். மேலும் இவ்வுரையாசிரியர் வேறு இடங்களிலும் இதனை விளக்கிக் கூறியுள்ளார். ஒப்புரவறிதல் என்னும் அதிகாரத்தின் தொடக்கத்தில், "ஒப்புரவறிதலாவது இல்லென இரந்துவந்தார் யாவர்க்கும் வரையாது கொடுக்கும் ஆற்றல் இலரெனினும் தம்மள விற்கும் வருவாயளவிற்கும் ஏற்கத் தக்கார்க்குத் தக்கன அறிந்து கொடுத்தல்” என்று எழுதியுள்ளார். இதில், நல்கூர்ந்தார், நல்குரவின் நீங்கினார் என்னும் இருபகுதியாரைக் கூறியது காண்க. இவ்வுரை யாசிரியர் ஈகை என்னும் அதிகாரத்தின் தொடக்கத்தில், ஈகையாவது இல்லென இரந்துவந்தார் யாவர்க்கும் வரையாது கொடுத்தல் எனச் செல்வரைக் குறிக்கிறார். புகழ் என்னும் அதிகாரத்தில் “புகழாவது புகழ் படவாழ்தல் என்று பெருஞ் செல்வராகிய வள்ளியோரைக் குறிப்பிடுகிறார். (இத்தகைய பாகுபாடு இன்றும் மக்கள் சமுதாயத்தில் காணப்படுகிறது.) ஆகவே, மக்கள் வாழ்க்கையில் அமைதியும் இன்பமும் ஒழுக்கமும் நிலைபெற வழிவகுத்த திருவள்ளுவர், பொருள் பெற்றோர் தத்தம் பொருளின் அளவுக்கு ஏற்ப அறம் செய்யவேண்டும் என்று கூறுகிறார். அறம் என்பது சமுதாய ஊழியம் செய்தல்; உள்ளவர் இல்லாதவருக்குத் தத்தம் சக்திக்கேற்ப உதவி செய்தல். திருவள்ளுவர் கூறுவதைப் பாருங்கள்; 'ஆற்றின் அள வறிந்து ஈக, அது பொருள் போற்றி வழங்கும் நெறி என்று கூறுகிறார். இதில் உள்ள ஒவ்வொரு சொல்லின் பொருளையும் ஊன்றிப்படித்து ணரவேண்டும். ஈகையாகிய சமூகத் தொண்டினையும் செய்ய வேண்டும்; பொருளையும் போற்றவேண்டும் என்று போற்றிவழங்கும் நெறியை நுட்பமாகக் கூறுகிறார். எனவே, திருவள்ளுவர் பொருளைப் போற்றவேண்டும் என்று சொல்லி, பொருளை இல்லாதவர்க்கு உதவவேண்டும் என்று கூறியது முன்னுக்குப் பின் முரண்படக்கூறியது அன்று. பொருளை இறுகப்பிடித்துக் கருமித்தனமாய் இராதே; ஊதாரித் தனமாய் தானம் செய்து ஏழ்மைப்படாதே என்று கூறுகிறார். அஃதாவது, பொருளை அளவோடு பகிர்ந்துகொடுத்து வாழவேண்டும் என்கிறார். இதற்கு இக்காலத்தில் சமதர்மம் (Socialisam) என்று பெயர் கூறுகிறார்கள்.