பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

223

திருவள்ளுவர் கூறிய சமதர்மம் (பகிர்ந்து கொடுத்து வாழ்தல்) என்பதற்கும், இக்காலத்தில் கூறப்படுகிற சமதர்மத்திற்கும் வேறுபாடு என்னவென்றால், திருவள்ளுவர், ஒவ்வொருவரும் தாமாகவே, தத்தம் பொருளைத் தமது பொருள் அளவுக்கு ஏற்ப இல்லாதவர்களுக்குப் பகிர்ந்துகொடுக்கவேண்டும் என்கிறார். இப்போதைய சமதர்மக்காரர், மக்கள் தம்மிடமுள்ள பொருளைத் தாமாகவே பகிர்ந்துகொடுக்க மாட்டார்கள்; அரசாங்கத்தார் சட்டம்செய்து பொருளைப் பகிர்ந்து வழங்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இதுவே திருவள்ளுவருக்கும் இப்போதைய சமதர்மக் கொள்கைக்கும் உள்ள வேறுபாடு. ஆனால், அடிப்படையான அமைப்பால், அஃதாவது பகிர்ந்து கொடுத்து வாழ வேண்டும் என்னும் கொள்கையில் இருவருக்கும் முரண்பாடு இல்லை.

6

பொருள் உள்ளவர் அஃது இல்லாதவர்க்கு அறம் (உதவி) செய்ய வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் எவ்வாறு வற்புறுத்துகிறார் என்பதைக் காண்போம். “காக்கை கரவா கரைந்துண்ணும், ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள” என்று கூறிப் பொருளைப் பகிர்ந்து கொடுக்கச் சொல்கிறார். ஈயாமல் இறுகப் பிடிக்கும் கஞ்சத்தனமாகிய கருமித்தனம் கூடாது என்று வற்புறுத்துகிறார். “பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று” என்றும், “அற்றார்க் கொன்று ஆற்றாதான் செல்வம், மிகநலம் பெற்றாள் தமியள்மூத்தற்று என்றும் கூறுகிறார். மேலும், சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன் என்றும் அளவளாவில்லாதான் வாழ்க்கை, குளவளாக் கோடின்றி நீர் நிறைந்தற்று என்று விளக்குகிறார். இல்லாதவர்க்கு ஈயும் பண்பில்லதவனிடம் உள்ள செல்வமானது, நல்ல இனிய பாலைத் தீயபாத்திரத்தில் வைத்துக் கெடுத்து உதவாமற் செய்வதற்குச் சமானம் என்று அறிவுறுத்துகிறார். நச்சப்படாதவன் செல்வம், ஊர் நடுவில் நச்சுமரம் காய்த்துப் பழுத்ததற்குச் சமானம் என்றும், நயன் உடையவனிடத்தில் உள்ள செல்வ மானது உள்ளூரிலே பயன்படுகிற நல்ல மரம் பழுத்து உதிர்வதற்குச் சமானம் என்றும் உவமை காட்டி விளக்குகிறார். மேலும், “ஊருணி நீர் நிறைந்தற்றே, உலகவாம் பேரறி வாளன் திரு” என்று பகிர்ந்து கொடுத்து வாழ்வதன் சிறப்பை நன்கெடுத்தோதுகிறார். அறம் செய்வ திலும் (பகிர்ந்து கொடுப்பதிலும்) அறிவுடைமை வேண்டும், பாத்திரம் அறிந்து பிச்சையிடவேண்டும் என்பதையும் கூறுகிறார். சோம்பேறிகளுக்கும், ஏய்த்துப் பிழைக்கும் எத்தர்களுக்கும், தகுதியற்றவர்களுக்கும் உதவி