பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

செய்வது முட்டாள்தனம்; பேதையர் செயல் என்று எச்சரிக்கை செய்கிறார். “அறிவுஇலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும் இல்லை; பெறுவான் தவம் என்றும், “ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை” என்றும் கூறுவதன் மூலம், அறம் செய்வதிலும் அறிவுடைமை வேண்டும் என்று விளக்குகிறார். 'தாளாற்றித் தந்தபொருள் எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு” என்றும்; வறியார்க்கொன்று ஈவதே ஈகை என்றும், அற்றாற்கு ஒன்று ஈவதே ஈகை, அற்றார் அழிபசி தீர்த்தல் என்றும் இதனை மேன்மேலும் வற்புறுத்துகிறார்.

66

பொருளை நல்லவழியில் ஈட்டி, அதனைத் தானும் தன் சுற்றமும் சூழ துய்த்து இனிய வாழ்வு வாழ்ந்து, மற்றவர் வாழ்க்கைக்கும் உதவவேண்டும் என்பதே திருவள்ளுவர் கருத்து ஆகும்.”