பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. ஜைன மதமும் திருக்குறளும்*

கஉ

திருக்குறளிலே ஜைன மதத்தைப் பற்றிய கருத்துகளும் இருக்கின்றன. மற்றச் சமயத்தாருக்குத் திருக்குறளிலே காணப்படுகிற கொள்கையைவிட, அதிக உறுதியான ஜைன சமயக் கொள்கைகள் திருக்குறளிலே இடம்பெற்றிருக்கின்றன. திருக்குறள் கடவுள் வாழ்த்திலேயே ஜைன சமயத்தின் கடவுட் கொள்கைகள் விளக்கமாகக் காணப்படுகின்றன. அவைகளிலே முக்கியமாக நான்கைமட்டும் கூற முயலுவோம். திருக்குறள் கடவுள் வாழ்த்து, முதற் குறளிலே திருவள்ளுவர் ஆதிபகவனைக் கூறுகிறார். ஆதிபகவன் என்பவர், ஜைன சமயத்தின் முதல் தீர்த்தங்கரர் ஆவார். ரிஷபநாதர் என்பது அவருடைய இயற்பெயர். இவர்தான் ஜைன சமயத்தின் முதல் தீர்த்தங்கரர். ஜைன மதத்தை முதன் முதலாக உண்டாக்கியவரும் இவரே. ஆகையினாலே, ஜைனர்கள் இவரை ஆதிநாதர் என்றும், ஆதிபகவன் என்றும் கூறுகிறார்கள். திருக்குறள் கடவுள் வாழ்த்திலே முதன்முதலாக ஆதிபகவன் வணக்கம் கூறுப்படுகிறது. அந்தக் குறள், “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

என்பது. இந்தக் குறள் ரிஷபதேவரின் பெயராகிய ஆதிபகவன் என்பதைக் கூறுவது காண்க.

பொறிவாயில் ஐந்தவித்தான் என்று திருக்குறளில் கூறப் படுகிறவரும் சமண சமயத் தெய்வம் ஆகம். அனாதியான ஒரு பரம் பொருள், உலகத்தையும் உயிர்களையும் படைத்த ஒரு மூலக்கடவுள் உண்டு என்பது ஜைன சமயக் கொள்கை அன்று. ஐம்பொறியும் ஐம் புலனும் உடைய மனிதனாகப் பிறந்து, மனிதனாக வளர்ந்து, ஐம்பொறி களையும் ஐம்புலன்களையும் அடக்கித் தவம்செய்து, வினைகளை அறுத்துக் கடவுள் நிலையை அடைந்தவர்தான் ஜைன சமயத்தின் தெய்வம். அவர்தான் அருகக்கடவுள் என்றும், தீர்த்தங்கரர் என்றும் கூறப்படுகிறார். மற்ற மதங்களில் கூறப்படுகிற, அனாதியாகிய, பொறி * மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சமயங்கள் வளர்த்த தமிழ் (1966) நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.