பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

வாயில்கள் இல்லாதவரான பரம்பொருள் ஜைன சமயத்துக்கு உடன் பாடு இல்லை. ஐம்பொறிகளையும் ஐம்புலன்களையும் பெற்றிருந்து, பிறகு தவத்தினாலே ஐம்பொறிவாயில்களை அவித்து, பிறவித் துன்பத்தை நீக்கி, வீடுபேறு பெற்ற தீர்த்தங்கரர் அருகக் கடவுள் எனப்படுவார். இவர்தான் பொறிவாயில் ஐந்தைஅவித்துக் கடவுள் நிலையை அடைந்தவர். இவரைத்தான் திருக்குறள்,

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்'

99

என்று கூறுகிறது. மேலும், மலர்மிசை ஏகினான் என்பதும், அறவாழி அந்தணன் என்பதும் ஜைனக் கடவுளையே குறிக்கின்றன.

மலர்மிசை ஏகினான் என்பது ஜைனக் கடவுளுக்கு உரிய முக்கியமான சிறப்பாகும். ஜைனசமயக் கடவுளான அருகப்பெருமான் நடக்கும்போதெல்லாம் அவருடைய திருவடிகளைத் தாமரை மலர்கள் தாங்குகின்றன என்பது ஜைனசமயக் கொள்கை. இதை ஜைனசமய நூல்களில் நெடுகக் காணலாம். இந்த ஜைனசமயக் கருத்தைத் திருக்குறள் கூறுகிறது:

“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்

என்னும் குறளிலே, மலர்மிசை ஏகினான் என்று கூறப்படுவது ஜைனசமயக் கருத்தாகும்.

அறவாழி (தரும சக்கரம்) என்பதும் ஜைனசமயத்துக்கு உரிய முக்கியக் கொள்கையாகும். ஜைன சமயத்தவரின் அருகக் கடவுள் (தீர்த்தங்கரர்) தான் போகிற இடங்களிலெல்லாம் ஜைன தருமத்தைப் போதிக்கிறார் என்பதும், அவர் போதனையைக் கேட்கிற மக்கள் எல்லோரும், அவர்கள் வெவ்வேறு பாஷையைக் பேசுகிறவராக இருந்தாலும், அவர் கூறுகிற ஜைன தருமத்தை நன்றாகத் தெரிந்து கொள்கிறார்கள் என்பதும் ஜைன சமயக் கொள்கை. அருகப்பெருமான் போதிக்கிற ஜைனதருமத்திற்கு உபதேசத்திற்கு தருமச் சக்கரம் என்றும், அறவாழி என்றும் பெயர். அதனால்தான், ஜைனக் கடவுளாகிய அருகப்பெருமான் (தீர்த்தங்கரர்) அறவாழி அந்தணன் என்று கூறப்படுகிறார். இது ஜைனக் கொள்கைதான் திருக்குறள்,