பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

நரசிம்மவர்மன் கலகத்தை யடக்க இவர்களைக் காஞ்சியிலிருந்து “நாடு கடத்தி” யிருக்கலாம். திருமழிசை யாழ்வார் பாடல்களில் இதற்குச் சான்றுகள் உள்ளன. இவர் பௌத்த சமண சமயங்களைக் கடுமை யாகத் தாக்கிப் பாடுகிறார். அதனுடன் சைவர்களையும் கடுமையாகத் தாக்குகிறார். இதனால் சைவர்கள் சினங்கொண்டு எதிர்வாதம் செய்திருக்கக் கூடும். இதனால் சமயப் பூசலும் குழப்பமும ஏற்பட்டிருக்கும். நகரத்தில் இருக்கும் அரசன், இக் குழப்பத்துக்குக் காரணமாயிருந்த திருமழிசையாரையும் கணிகண்ணரையும் தற்காலிக மாக நாடு கடத்தியிருக்கக் கூடும். கலகம் அடங்கியவுடன் அரசன் நகரத்திற்கு வர அனுமதியளித்திருக்கக் கூடும்.

திருமழிசையாழ்வாரது பாடல்களில் சைவர்களைத் தாக்கும் செய்யுள்கள் சிலவற்றைக் காட்டுவோம்.

66

66

'அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்

66

சிறியார் சிவப்பட்டார் செப்பில் - வெறியாய

மாயவனை மாலவனை மாதவனை யேத்தாதார் ஈனவரே யாதலால் இன்று.

9915

'ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு

மேலையுகத் துரைத்தான் மெய்த்தவத்தோன் அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல்மேல் வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு

916

ஞாலம்

'குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர்பெய்து மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி

-

கறைகொண்ட

கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்

அண்டத்தான் சேவடியை யாங்கு.

9917

"ழண்டன்நீறன் மக்கள் வெப்புமோடி அங்கி ஓடிடக்

கண்டுநாணி வாணனுக்கு இரங்கினான் எம்மாயனே.

விரிவஞ்சி நிறுத்துகிறோம்.

9918

சிவவாக்கியர் என்னும் பெயருடன் பழுத்த சைவ அடியாராக இருந்து சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்த இவர், பேயாழ்வாரால் வைணவ பக்தராக்கப் பட்ட பிறகு, இவ் வாறெல்லாம் சிவனையும் சைவர்களையும் கடுமையாகத் தாக்கிப் பாடியது சைவருக்கு ஆத்திரம் மூட்டியிருக்கலாம். இதனால் நகரத்தில் சைவ