பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. ஆழ்வார் நாயன்மார் பாடல்கள்*

மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்திலிருந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் இயற்றிய பாடல்களில் சிலவற்றை மாதிரிக்காகக் காட்டுவோம். இப் பாடல்கள், அக்காலத்தில் இருந்த சைவ வைணவக் கருத்துக்களையும், பக்தியையும், சமயக் காழ்ப்பு முதலியவற்றையும், கண்ணாடிபோல் காட்டுகின்றன. அன்றியும் செய்யுள் நடையையும் புலப்படுத்துகின்றன.

வை பொய்கை ஆழ்வார் இயற்றிய இயற்பா முதல் திருவந்தாதியிலிருந்து எடுக்கப்பட்டவை:

வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை இடராழி நீங்குகவே யென்று.

1

நெறிவாசல் தானேயாய் நின்றானை ஐந்து பொறிவாசல் போர்க்கதவம் சாத்தி - அறிவானாம் ஆலமரநீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த

ஆலமர் கண்டத் தரன்.

அவரவர் தாம்தாம் அறிந்தவா றேத்தி

-

இவரிவ ரெம்பெருமா னென்று சுவர்மிசைச் சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த மூர்த்தி யுருவே முதல்.

கைய வலம்புரியும் நேமியும் கார்வண்ணத்

-

தைய! மலர்மகள்நின் ஆகத்தாள் செய்ய

மறையான்நின் உந்தியான் மாமதிள்மூன் றெய்த

இறையான்நின் னாகத் திறை.

மனமாசுதீரும் அருவினையும் சாரா

தனமாய தானேகை கூடும் - புனமேய

  • மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய 'வாதாபி கொண்ட நரசிம்மவர்மன்

(1957) எனும் நூலில் இடம் பெற்றுள்ளது.

2

3

4