பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி தாம்தொழா நிற்பார் தமர்.

சென்றால் குடையாம், இருந்தால்சிங் காசனமாம், நின்றால் மரவடியாம், நீள்கடலுள் - என்றும்

245

புணையாம், மணிவிளக்காம், பூம்பட்டாம், புல்கும் அணையாம் திருமாற் கரவு.

6

அடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம் மிடைந்தவை மீண்டொழிய வேண்டில் - நுடங்கிடையை முன்இலங்கை வைத்தான் முரணழிய முன்னொருநாள் தன்விலங்கை வைத்தான் சரண்.

தோளவனை யல்லால் தொழாஎன் செவியிரண்டும் கேளவன தின்மொழியே கேட்டிருக்கும் - நாள்நாளும் கோணா கணையான் குரைகழலே கூறுவதே நாணாமை நள்ளேன் நயம்.

நயவேன் பிறர்பொருளை நள்ளேன்கீ ழாரோடு உயவேன் உயர்ந்தவரோ டல்லால் - வியவேன் திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன் வருமாறென் நம்மேல் வினை.

வினயால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார் தினையேனும் தீக்கதிக்கண் செல்லார் – நினைதற் கரியானைச் சேயானை ஆயிரம்பேர்ச் செங்கண் கரியானைக் கைதொழுதக் கால்.

10

ஏற்றான்புள் ளூர்ந்தான் எயிலெரித்தான் மார்விடந்தான் நீற்றான் நிழல்மணி வண்ணத்தான்

கூற்றொருபால்

மங்கையான் பூமகளான் வார்சடையான் நீள்முடியான் சங்கையான் நீள்கழலான் காப்பு.

11

கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்? மண்தா வெனவிரந்து மாவலியை - ஒண்தாரை நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள்விசும்பில் ஆரங்கை தோய வடுத்து.

12

9

00

7

5