பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

கண்டேன் திருமேனி யான்கனவில் ஆங்கவன்கைக் கண்டேன் கனலும் சுடராழி கண்டேன்

-

உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும் மறுநோய் செறுவான் வலி.

-

யானே தவஞ்செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும் யானே தவமுடையேன் எம்பெருமான்! யானே இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன் பெருந்தமிழன் நல்லேன் பெரிது.

வரைச்சந் தனக்குழம்பும் வான்கலனும் பட்டும்

விரைப்பொலிந்த வெண்மல் லிகையும் - நிரைத்துக்கொண் டாதிக்கண் நின்ற அறிவ னடியிணையே

ஓதிப் பணிவ துறும்.

பகல்கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்

-

மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே மிகக்கண்டேன் ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான் வான்திகழும் சோதி வடிவு.

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய் விண்ணுலகந் தன்னகத்து மேவேனே நண்ணித் திருமாலைச் செங்கண் நெடியானை எங்கள் பெருமானைக் கைதொழுத பின்

அத்தியூ ரான்புள்ளை யூர்வாதன் அணிமணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான் - முத்தீ

மறையாவான் மாகடல்நஞ் சுண்டான் தனக்கும்

இறையாவான் எங்கள் பிரான்.

247

5

LO

6

7

00

9

10

கீழ்க்கண்டவை பேயாழ்வார் அருதுளிச்செய்த அயற்பா

மூன்றாந் திருவந்தாதியிலிருந்து எடுக்கப்பட்டவை:-

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்க னணிநிறமுங் கண்டேன் - செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் என்னாழி வண்ணன்பால் இன்று.

1