பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

வேறிசைந்த செக்கர்மேனி நீறணிந்த புன்சடை கீறுதிங்கள் வைத்தவன்கை வைத்தவன்க பால்மிசை ஊறுசெங் குருதியால் நிறைத்தகார ணந்தனை ஏறுசென்ற டர்த்தஈச! பேசுகூச மின்றியே.

மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான் கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்து ஓடவாண னாயிரம் கரம்கழித்த ஆதிமால் பீடுகோயில் கூடுநீர் அரங்கமென்ற பேரதே.

இரந்துரைப்ப துண்டுவாழி ஏமநீர் நிறத்தமா! வரம்தரும் திருக்குறிப்பில் வைத்ததாகில் மன்னுசீர் பரந்தசிந்தை யொன்றிநின்று நின்னபாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீநினைக்க வேண்டுமே. கேடில்சீர் வரத்தனாய்க் கெடும்வரத்த யன்அரன் நாடினோடு நாட்டமாயி ரத்தன்நாடு நண்ணிலும் வீடதான போகமெய்தி வீற்றிருந்த போதிலும் கூடும்ஆசை யல்லதொன்று கொள்வனோ? குறிப்பிலே. வாள்களாகி நாங்கள்செல்ல நோய்மைகுன்றி மூப்பெய்தி மாளுநாள் தாதலால் வணங்கிவாழ்த்தென் நெஞ்சமே ஆளதாகும் நன்மையென்று நன்குணர்ந்த தன்றியும் மீள்விலாத போகம்நல்க வேண்டும்மால பாதமே.

சலங்கலந்த செஞ்சடைக் கறுத்தகண்டன் வெண்தலை புலன்கலங்க வுண்டபாத கத்தன்வன்து யர்கெட அலங்கல் மார்பில் வாசநீர் கொடுத்தவன் அடுத்தசீர் நலங்கொள்மாலை நண்ணும்வண்ணம் எண்ணுவாழி

251

4

5

6

7

00

நெஞ்சமே.

9

அச்சம்நோயொ டல்லல்பல பிறப்புஆய மூப்பிவை

வைத்தசிந்தை வைத்தவாக்கை மாற்றிவானி லேற்றுவான் அச்சுதன் அனந்தகீர்த்தி ஆதியந்த மில்லவன் நச்சுநா கணைக்கிடந்த நாதன்வே கீதனே.

10