பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

இல்லா விட்டாலும், சுந்தரர் தேவாரத்தைப் பற்றி எழுதுகிறபடியால், அந்தத் தேவாரத்தைப் படித்திருக்க வேண்டும். படித்தாரோ, படிக்க வில்லையோ நமக்குத் தெரியாது. ஆனால், சுந்தரர் தேவாரத்தைப் பற்றி ஒரு தவறான செய்தியை உண்மைக்கு மாறாகக் கூறுகிறார். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார். சுந்தரர் தேவாரத்திலே ஜைனரைப்பற்றி ஒரு குறிப்புக் கூட இல்லை என்று சிறிதும் அஞ்சாமல் தைரியமாகக் கூறுகின்றார். இது உண்மைதானா என்பதைச் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரத்தில் தேடிப் பார்ப்போம்.

66

'குண்டாடிச் சமண் சாக்கியப் பேய்கள்

கொண்டா ராகிலும் கொள்ளக்

கண்டாலுங் கருதேன் எருதேறுங் கண்ணா நின்னல தறியேன்”.

"வெற்றரைக்கற் றமணும் விரையாது

(திருநாட்டியத்தான்குடி 9)

விண்டால முணுந்

துற்றரைத் துற்றறுப்பான் துன்னவாடைத்

தொழிலுடை யீர்'.

(பழமண்ணிப்படிக்கரை 9)

66

'குண்டாடுஞ் சமணரும் சாக்கியரும்

(திருக்கருப்பறியலூர் 10)

(திருவாழ்கொளிபுத்தூர் 10)

66

66

புறங்கூறுங் கொகுடிக் கோயில்”.

"இருந்துண் தேரரும் நின்றுண் சமணரும் ஏச நின்றவன்”.

'நமையெலாம் பலர் இகழ்ந் துரைப்பதன் முன்

நன்மை யொன்றிலாத் தேரர் புன்சமணஞ் சமயமாகிய தவத்தினார் அவத்தத் தன்மை விட்டொழி நன்மையை வேண்டில்”,

(திருத்தினைநகர் 9)

ஜைனரை (சமணரை) மட்டும் அல்லாமல் பௌத்தர்களையும் கூறுகிறார் சுந்தரமூர்த்திநாயனார். தேரர், சாக்கியர் என்று பௌத்தர் களையும், சமணர் என்று ஜைனரையும் இத் தேவாரப் பதிகங்களில் கூறுவது காண்க. திரு. வையாபுரிப் பிள்ளையவர்கள் சமணர்களைப் பற்றி ஒரு குறிப்பும் கூறவில்லை என்று எழுதுகிறார்! மேலே ஐந்து குறிப்புகளைக் கண்டோம். இன்னும் பல குறிப்புகள் உள்ளன. அவைகளையும் காண்போம்.