பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

“கரும்பும் செந்நெலும் காய்கமுகின் வளம்

நெருங்கு தண்டலை நீணெறி.

"பாய்திமிலர் வலையோடு மீன்வாரிப் பயின்றெங்கும் காசினியில் கொணர்ந்தட்டுங் கைதல்சூழ் கழிக்கானல்.

“பானிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்குருகு கானிலவும் மலமர்ப் பொய்கை கைதல்சூழ்கழிக் கானல்.

66

'கோங்கமே குரவமே கொழுமலர்ப்புன்னையே கொகுடி முல்லை வேங்கையே நாழலே விம்மு பாதிரி

களேவிரவி யெங்கும்

ஓங்குமா காவிரி வடகரை யடை

குரங்காடு துறை.

'குருந்துயர் கோங்கு கொங்கு கொடிவிடு

முல்லை மல்லிகை செண்பகம் வேங்கை,

கருந்தடங் கண்ணின் மங்கைமார்

கொய்யும் கழுமல நகர்.

99

“தேங்கொள் பூங்கமுகு தெங்கு இளங்கொடிமாச் செண்பகம் வண்பலா இலுப்பை,

66

வேங்கை பூமகிழ்ஆல் வெயில்புகா வீழிமிழலை,

‘இஞ்சிக் கேகதலிக்கனி விழக் கமுகின் குலையொடும் பழம் விழத் தெங்கின்,

மிஞ்சுக்கே மஞ்சுசேர் பொழில் வீழிமிழலை.

99

"தேனார்தெழு கதலிக்கனி உண்பான் திகழ்மந்தி மேனோக்கி நின்றிரங்கும் பொழில்.

66

"தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு

கொம்புதைப்பக் கொக்கின் காய்கள்

கவணெறிகல்போற் சுனையின் கரைசேரப்

புள்ளிரியுங் கழுமலமே.