பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

குடை டைபிடிப்பது போல நின்றது. அருகிலே வளர்ந்திருந்த செந்நெற்கதிர் பூவின் அருகில் காற்றினாலே அசைந்து கொண்டிருந்தது. இந்தக் காட்சி, அரசிளங் குமரன் ஒருவன் கொற்றக் குடையின் கீழே பொன் ஆசனத்தில் அமர்ந்திருக்க, தாதிப் பெண்கள் சாமரை வீசிக்கொண்டிருப்பது போலக் காணப்பட்டது என்று உவமை

கூறுகிறார்:

“செறியிலைத் தாமரைத் தவிசில் திகழ்ந்தோங்கும்

இலைக்குடைக்கீழ்ச் செய்யார் செந்நெல்

வெறிகதிர்ச் சாமரை யிரட்ட இளவன்னம்

வீற்றிருக்கும் மிழலை யாமே.

கடற்கரையை யடுத்த ஒரு கானல் கழியின் ஓரத்திலே அடர்ந்து வளர்ந்த தாழம் புதரில் தாழம் பூ பூத்திருந்தது. அதன் அருகில் தண்ணீரிலே தாமரை மலர் அலர்ந்திருந்தது. அக் கழியில் வாழும் கெண்டைமீன் அவ்விடத்திற்கு வந்தபோது, தண்ணீரில் காணப்படுகிற தாழம்பூவின் நிழல் ஒரு பறவைபோல் தோன்ற அதைக் கண்டு கெண்டைமீன் அச்சங்கொண்டு தாமரைப் பூவின் கீழே ஓடி ஒளிந்தது. கெண்டை மீனின் அறியாமையைக் கண்ட கழிக்கரையில் கிடந்த முத்துகளும் சிப்பிகளும் நகைப்பது போலத் தோன்றின என்று கூறுகிறார் :

“மடல் விண்ட முடத்தாழை

மலர் நிழலைக் குருகென்று தடமண்டு துறைக் கெண்டை தாமரையின் பூ மறையக் கடல் விண்ட கதிர்முத்தம்

நகை காட்டுங் காட்சியதே.”

குடவாயில் தோட்டத்திலே வாழை மரங்களின் மஞ்சள்நிறமான வாழைப்பழங்கள் பொன் காய்த்தது போலவும், பாக்கு மரங்களின் செந்நிறமாகப் பழுத்த காய்கள் பவழம் காய்த்தது போலவும் தோன்றின என்பதை,

குலைவாழை கமுகம் பொன் பவளம் பழுக்கும் குடவாயில்

என்று கூறுகிறார்.