பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

267

புங்கமரத்தின் பூக்கள் தரையில்உதிர்ந்து கிடப்பது நெல் பொறியைச் சிதறியிருப்பது போலத் தோன்றிற்று என்றும், கோங்கு மலர் பொன் பூத்தது போல மஞ்சள் நிறமாக இருந்தது என்றும், பசுமையான இலைகளுக்கு இடையிலே செந்நிறமான ஆலங்காய்கள் காய்த்திருப்பது திரண்ட பவளங்களைப் போல இருந்தன என்றும் உவமை கூறுகிறார்:

"பொரியேர் புன்கு சொரி புஞ்சோலை. “பொன்போதலர் கோங்கோங்கு சோலை.

“கோலமாய்க் கொழுந்து ஈன்று பவளம் திரண்டதோர் ஆலமரம்.

99

பாம்பின் வாயிலே அகப்பட்ட சிறு பறவை புதரிலேயுள்ள பூவின் தேனைச் சுவைத்து இன்புற்றதுபோல நோய், மூப்பு, சாக்காடு என்ப கைகளினால் பிணிப்புண்டுள்ள இந்த உடம்பு சிற்றின்பத்தை விரும்புகிறது என்று கூறுகிறார்:

“செடிகொள் நோயாக்கையைப் பாம்பின் வாய்த்

தேரைவாய்ச் சிறுபறவைக்

கடிகொள் பூந்தேன் சுவைத்தின் புறலாமென்று கருதினாயே...

கழிக்கரையில் தாழம்புதரின் அருகே நின்றிருந்த ஒரு கொக்கு, தாழைமடல் தொங்குவதைத் தன் மனைவியாகிய கொக்கு என்று கருதி அதைத் தழுவிற்றாம்!

66

'ஏழை வெண் குருகயலே யிளம்பெடை தனதெனக் கருதித்

தாழை வெண் மடல்புல்குந் தண்மறைக் காடு.

ஆண் அன்னப் பறவை பெண் அன்னத்துடன் தாமரைப் பூவின்மேலே அமர்ந்திருப்பதும் அருகிலே நின்ற நெற்கதிர்கள் காற்றில் அசைவதும் ஆன காட்சி, அரசனும் அரசியும் சிம்மாசனத்தில் வீற்றிருக்க அவர்களுக்கு இருபுறத்திலும் மங்கையர் சாமரை வீசுவதுபோலிருந்தது என்று கூறுகிறார்:

66

'தளையவிழ் கமலத் தவிசின்மேல் அன்னம்தன்

இளம்பெடை யொடும் புல்கி

விளைகதிர் கவரிவீ வீற்றிருக்கும்.