பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

3.சிறுத்தொண்டர்

ஞானசம்பந்தர் “சிறுத்தொண்டரை”க் குறிப்பிடுகிறார். சிறுத் தொண்டர் என்பது சிறுத்தொண்ட நாயனாராகிய பரஞ்சோதியாரை அன்று. அவரைத் தவிர்த்து வேறு சிறுத்தொண்டரையும் குறிப்பிடு கிறார். செங்காட்டங் குடியில் கணபதீச்சரம் அமைத்துத் திருத்தொண்டு செய்த வந்த பரஞ்சோதியாராகிய சிறுத்தொண்ட நாயனாரை ஞான சம்பந்தர் தமது தேவாரப் பதிகத்தில் கூறுவது யாவரும் அறிவர். அந்தச் சிறுத்தொண்டர் நரசிம்மவர்மனின் யானைப் படைத்தலைவராக இருந்து, வாதாவி நகரத்திற்குச் சென்று போர்புரிந்தார் என்றும், பின்னர் அரசரது ஊழியத்தை விட்டுப் பக்தியில் ஈடுபட்டு இருந்தார் என்றும், அவருடன் ஞானசம்பந்தரும் அப்பரும் நட்புக்கொண்டிருந்தனர் என்றும் முன்னமே கூறியுள்ளோம். ஞானசம்பந்தர் அவரைத் தமது திருப்பதிகங்களில் இவ்வாறு கூறுகிறார் :

66

'பொடிநுகரும் சிறுத்தொண்டர்க் கருள் செய்யும் பொருட்டாகக் கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே.

என்றும்,

“செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன்.”

என்றும்,

செருவடிதோட் சிறுத்தொண்டன்.

என்றும்,

66

“சீராளன் சிறுத்தொண்டன்."

என்றும்,

66

'சிறப்புலவன் சிறுத்தொண்டன்.

என்றும்,

"வெந்த நீறணி மார்பன் சிறுத்தொண்டன்.' என்றும் கூறுகிறார்.

இந்தச் சிறுத்தொண்டரைத் தவிர வேறு சிறுத்தொண்டர் களையும் ஞானசம்பந்தர் கூறுகிறார். அவர் கூறுவது இது: