பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

66

269

“வணங்கும் சிறுத்தொண்டர் வைகலேத்தும் வாழ்த்தும் கேட்டு அணங்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

66 "வெள்ளமெல்லாம் விரிசடை மேலோர்

66

விரிகொன்றை

கொள்ளவல்லான் குரைகழல் ஏத்தும்

சிறுத்தொண்டர்

உள்ளமெல்லாம் உள்கிநின்றாங்கே உடனாடும்

கள்ளம் வல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றமே.

99

"பழகவல்ல சிறுத்தொண்டர் பாவின்னிசை குழகரென்று குழையா வழையாவரும் கழல்கொள் பாடலுடையார் கருகாவூரெம் அழகர் வண்ணம் அழலும் அழல்வண்ணமே.'

99

இப் பாடல்களில் கூறப்படுகிற சிறுத்தொண்டர் என்பவர் யாவர்? அவர் ஏன் சிறுத்தொண்டர் என்று கூறப்படுகின்றனர்? என்பன ஒன்றும் விளங்கவில்லை. இதனை ஆராயவேண்டுவது அறிவுடையவர் கடனாகும்.

4. கழியில் மீன்பிடித்தல்

பௌத்தப் பள்ளிகளையடுத்த கழிகளிலே பௌத்தத் துறவி களில் சிலர் ஒருவருமறியாமல் மீன்பிடித்த செய்தியை ஞானசம்பந்தர் கூறுகிறார். துறவிகளுக்குரிய சீலங்களில் உயிர்களைக் கொல்லக் கூடாது என்பதும் ஒன்று. பௌத்தத் துறவிகளில் சிலர் இவ்வாறு உயிர்க் கொலை செய்து வந்தது பௌத்த ஒழுக்கத்துக்குப் புறம்பானது. ஒவ்வொரு சமயத்திலும் கால வேறுபாட்டினாலே சிற்சிலர் சமய ஒழுக்கத்தைத் தவறி நடப்பது உண்டு. அவ்வாறு தவறி நடந்த செய்தியை ஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.

66

“கடுக்கள் தின்று கழிமீன் கவர்வார்கள்.

என்றும்,

“கழிக்கறைப் படுமீன் கவர்வார்.

என்றும்,