பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

271

புகழ்ப் பூழியன் தென்னவன் கோழிமன்” செய்த மூக்கீச்சரம் என்றும், “அந்தண மாதன னேரியன் செம்பிய னாக்கிய” மூக்கீச்சரம் என்றும், "சீரினாலங்கொளிர் தென்னவன் செம்பியன் வில்லவன்” சேரும் மூக்கீச்சரம் என்றும் கூறுகிற இவர், மூவேந்தரின் கொடிகளையும் கூறுகிறார்.

"செருவிலாரும் புலி செங்கயல் ஆனையினான் செய்த

பொருவின் மூக்கீச்சரத்தெம் அடிகள்

என்று கூறுகிறார். இதில் சோழருடைய புலிக் கொடியையும் பாண்டிய ருடைய மீன்கொடியையும் கூறி, சேரருடைய விற்கொடியைக் கூறாமல் ஆனைக்கொடியைக் கூறுகிறார். சேரர்களுக்கு யானைக் கொடியும் இருந்த தென்பது இதனால் தெரிகிறது. யானைக் கொடி எந்தக் காலத்தில் சேரர் களுக்குரியதாயிருந்தது என்பதை ஆராய்வது சரித்திர வரலாற்றுக்கு முக்கியமாகும். தென்னாட்டிலே யானை பொறித்த காசுகள் வழங்கி வந்தன என்று நாணய ஆராய்ச்சியாளர்கள் (Numinsmatics) கூறுகிறார்கள். இவற்றை யாராய்வது தமிழ் நாட்டுச் சரித்திர வரலாற்றாசிரியர் கடமையாகும்.

சம்பந்தர் தமது காலத்திலோ அல்லது தமக்கு முற்பட்ட காலத் திலோ இருந்த பல்லவ மன்னர்களைத் தமது தேவாரத்தில் குறிப்பிட வில்லை. ஆனால், தமது காலத்திலிருந்த சோழ அரசனைக் குறிப்பிடுகிறார். அந்தச் சோழ மன்னன் பெயரைக் கூறவில்லை. நெடுமாறன் என்னும் கூன்பாண்டியன் மனைவியாராகிய பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசியாரின் தந்தையாகிய சோழனை அவர் குறிப்பிடுகிறார். அந்தச் சோழனை மணிமுடி தரித்துப் பெரிய இராச்சியத்தை யரசாண்டவன் என்று கூறுகிறார்:

66

"மண்ணெலாம் திகழ மன்னனாய் மன்னு

மணிமுடி சோழன் றன் மகளாம்

பண்ணினேர் மொழியாள் பாண்டிமாதேவி

பாங்கினாற் பணிசெய்து பரவும்.

99

ஆலவாய்த் திருக்கோயில் என்று கூறுகிறார். இது சரித்திரத் துக்கு முரண்பட்ட செய்தி. மங்கையர்க்கரசியின் தந்தையாரான சோழ அரசன், பல்லவ அரசருக்குக்கீழ் (மகேந்திரவர்மன் நரசிம்மவர்ம னுக்குக் கீழ்.) குறுநில மன்னனாக இருந்தார் என்று சரித்திரம் கூறுகிறது.