பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

9. இசை, ஆடல், பாடல்

275

இசை ஆடல் பாடல் ஆகிய கலைகளைப்பற்றி ஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார். இந்தக் கலைகள் அக் காலத்திலே நமது நாட்டில் நன்கு பயிலப்பட்டன என்பது தெரிகிறது. இக் கலைகளைப்பற்றி அவர் குறிப்பிடுகிற பகுதிகளைக் கீழே தருகிறோம்:

66

“பண்ணின் நல்ல மொழியார், பவளத்துவர் வாயினார்

எண்ணின் நல்ல குணத்தார், இணைவேல் வென்ற கண்ணினார் வண்ணம்பாடி வலிபாடித் தம் வாய்மொழி பாடவே,

“புரிகுழலார் சுவடொற்றி முற்றப்

66

பாவிய பாடல் அறாத ஆவூர்,

“விழவொ டொலிமிகு மங்கையர் தகுமாடசாலை

முழவொடிசை நடமுஞ் செயு முதுகுன்று,

“கருகு குழல் மடவார் கடி குறிஞ்சியதுபாடி

66

முருகன்னது பெருமை பகர் முதுகுன்று,”

“நொம் பைந்து புடைத் தொல்கு

நூபுரஞ்சேர் மெல்லடியார்

அம்பந்தும் வரிக்கழலும் அரவஞ்செய் பூங்காழி,”

وو

“கருந்தடங் கண்ணார் கழல் பந்தம்மானைப் பாட்டயரும் கழுமலம்,

66

'பண்ணின்மொழியார் பாடலோவாப் பாசூர்,

“பண்ணியல் பாடலறாத ஆவூர்,”

“வேலியின் விரைக் கமல மன்ன முகமாதர் பாலென மிழற்ற நடமாடு பழுவூர்,

“பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடலாட லோடார வாழ்பதி” திருக்களர்.

“சரியின் முனகை நன்மாதர் சதிர்பட மாநடமாடி

யுரிய நாமங் களேத்தும் ஒலிபுனற்காழி நன்னகர்,