பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

இரண்டாடி

-

281

மிக்க

பதபொருள் : புண்டரிகம் திரிபுண்டரம், தவன் பெருமை யையுடையவன், மேவிய பொருந்திய, புகலி சொல்லப்பட்டவன். ஏ - என்பதீற்றசை.

பொழிப்பு: ஆன்மாக்களுக்கு இரக்ஷையாக முண்டம்போலிருந்த திருநீற்றை யணியப்பட்ட மிக்க கருணையானவனே யான் பாடும் பாடலை யுவந்துள்ளவன்.

மூன்றாமடி

பதப்பொருள் : புண்டரிகம் - புலி, தவன் - தவமுனி, மே -கூத்து, வியம் - - பொன், பு - பொது, கலி - கற்றவன்.

பொழிப்பு: புலிக்காலும் புலிக் கையும் பெற்றுள்ள வியாக்கிரபாத முனிவருக்கு ஞானானந்தமாகிய நாடகத்தைக் கனகசபையிலே யாடல் செய்யும் பரதவித்தையைக் கற்றுள்ளான். (வியம் எனற்பாலது, வியவெனக் கடை குறைந்து நின்றது.)

நான்காமடி

பதபொருள் : புண்டரிகத்தவன் - பிரமதேவன், மேவிய - தனது போதத்தாலே பணியலுற்ற, புகலியே - புகலியென்னுஞ் சீகாழிப்பதியே.

பொழிப்பு : கீழ்ச் சொன்ன லீலைகளெல்லாஞ் செய்கின்ற சிவன் தனதிச்சையால் பொருந்தியிருக்குமூர் பிர்மாவானவன் பூசித்த புகலி யென்னுந் திருப்பதி.

விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்

விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்

விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்

4

முதலடி

பதப்பொருள் : விள - விளாம்பழத்தை, கொளி

கன்று

குணிலாக எறிந்து கொண்டவனாகிய விஷ்ணு, தி - விட்டு விளங்கா

நின்ற, கழ்தரு - நின்மல நீடிய, எங்கு

- தனது திருமேனியிலே மேவினன்.

எவ்விடத்தில், உருமேவினன்