பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

பொழிப்பு : கன்று குணிலாக எறிந்து விளவின் கனியைக் கொண்ட நாரணனைப் பிரகாசஞ் செய்யப்பட்டு நின்மலமாயிருந்துள்ள தனது பெரிய திருமேனியிலே ஒன்று பாதியாக வைத்துள்ளான். (தீ எனற்பாலது, தி எனக் குறுகிநின்றது. கழுதரு எனற்பாலது, கழ்தரு என நின்றது.)

இரண்டாமடி

பதப்பொருள் : விலங்கு எனற்பாலது விளங்கு எனவும், ஒலி எனற் பாலது ஒளி எனவுந் திரிந்து நின்றது. விலங்கு - மாறு பாடாய், ஒலி கதறப்பட்ட பௌத்தனது தலையிலே, தீ - அக்கினியைச் சொரிந்து, கழ்தரு மிக்க பயத்தோடும் விழுகின்ற, எங்கு - ஒலிக்கும், உருமு இடியை, ஏவினன் - விழும்படி யேவினன்.

பொழிப்பு : மாறுபாடாய்க் கதறப்பட்ட பௌத்தனது தலையிலே அக்கினியைச் சொரிந்து மிக்க பயத்தோடும் விழுகின்ற இடியை விழும்படி யேவிப் பௌத்தரை வேரறுத்தானுந் தானேயன்றியானன் றாகும்.

தீ எனற்பாலது தி எனவும், காழ்தரு எனற்பாலது கழ்தரு எனவும், ஏங்கு எனற்பாலது எங்கு எனவுங் குறுகி நின்றன.

மூன்றாமடி

பதப்பொருள் : விள் - நீங்குதல், அங்கு - அவ்விடத்தில், ஒளிது ஒள்ளியது, இகழ்தரு - இகழப்படும், எங்குரு எம்முடைய குரு, மேவினன் - கலந்தனன்.

பொழிப்பு : தனது பரிபூரணத்திலே தன்னையிழந்து இரண்டாய் விசுவமுருகித் தான் விஷமாகத் தூஷணப் பட்டு நிற்கின்ற எனக்கும் குருமூர்த்தியாய் வந்து என் என் பிறவியை யொழித்துத் தனது பேரின்பமாகிய பரிபூரணத்திலே எனதடிமை குலையாம லிரண்டற வைத்தவன்.

நான்காமடி

பதப்பொருள் : விளங்குஒளி - எங்கும் பிரகாசியா நின்ற கீர்த்தி, திகழ்தரு - சிறத்தல், வெங்குரு - இயமனால் பூசிக்கப்பட்டட திருப்பதி, மேவினன் - விரும்பினன்.