பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

283

பொழிப்பு : கீழ்ச் சொல்லிப் போந்த செய்திகளெல்லாமுடைய னெத்தன்மையனோ வென்னில், எங்கும் பிரகாசியாநின்ற கீர்த்தியினாற் சிறக்கப்பட்டுள்ள இயமனாற் பூசிக்கப்பட்ட வெங்குரு வென்னும் திருப்பதியை விரும்பியுள்ளான். (வெங்குரு என்பதும் சீகாழி.)

முதலடி

சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்

சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்

5

பதபொருள் : சுடர்மண் சூடார்மண், இம் ஈமம், ஆளி- ஆளப்பட்டவன், கைத்தோணி ை போர்தொலைத்த தும்பைமாலை,

புரத்து - திரிபுரங்களையும், அவன் - அவம்பண்ணினவன்.

பொழிப்பு : சுடுநிலமாகிய மயானத்தை நடமாடுமிடமாகக் கொண்டும், முப்புரங்களையும் நகைசெய்து சுடப்பட்ட வெற்றிப் போரையுடைய தும்பைமாலைக் கடவுள்.

சூடார் எனப்பாலது சுடர் எனவும், ஈமம் எனற்பாலது இம் எனவும் குறுகிநின்றன. துரோணமெனற் பாலது தோணியென மருவிற்று. இரண்டாமடி

பதபொருள்: சுடர்மணி சூடாமணி, மாளி - மாலி, கைத்தோள் துதிக்கையினையுடைய யானையை, நிபுரத்தவன் வடிவில்லாமற்

செய்தோன்.

பொழிப்பு: என்னுச்சிக்குச் சூடாமணியாய் என்மேல் வைத்த மாலினையுடையவனுமாய் யாகத்தின்கண் வந்த யானையை வடிவொழித்துப் போர்க்குந் தன்மையையுடையவன்.

சூடாமணி யெனற்பாலது சடர்மணி யெனவும், மாலியெனற்பாலது மாளியெனவும், தோல் எனற்பாலது தோள் எனவும் நின்றன. மாலையையுடையவன் மாலி. தோல் - யானை.

மூன்றாமடி

பதப்பொருள்: சுடர் - சூரியன், மணி கழுவி, மாளி கெட்டவன். கைத்தோணி தெப்பம், புரத்தவன் - புரந்தவன்.