பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

தூய தமிழ்நடையாக இருந்தால் இந்த வசனநடை பெரிதும் அழகுபெற்றுச் செய்யுளுக்கு ஏற்ற வசனமாக அமைந்திருக்கும்.

சாசன

இந்தப் பாரதம் பாடிய பெருந்தேவனாரைப் பற்றி, அரசாங்கத்துச் தவறான செய்தியை

இலாகா

வெளியிட்டிருக்கிறது.

அறிக்கையொன்று

“பல்லவ அரசன் (மூன்றாம் நந்தி) காலத்தில் பாரத வெண்பா என்னும் தமிழ்ச் செய்யுள் நூலைப் பாடிய பெருந்தேவனார் என்னும் புலவர் வாழ்ந்திருந்தார். எப்படி என்றால், அந்த நூலின் உத்தியோக பர்வத்தின் வாழ்த்துச் செய்யுளில் தன்னை ஆதரித்த பல்லவ அரசனை 'தெள்ளாற்றில் வென்றவன்' என்று குறிப்பிடுகிறார்.

தமிழ் நூல்களாகிய புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந் தொகை, ஐங்குறுநூறு என்பவற்றின் தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ள கடவுள் வாழ்த்துச் செய்யுள்கள் இதே பெருந்தேவரினால் பாடப்பட்டன என்று நம்பப் படுகின்றன”5 என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த அரசாங்க அறிக்கையை உண்மை என்று கொண்டு, பிரெஞ்சுக்காரரான ழூவோ தூப்ராய் அவர்கள் தாம் எழுதிய பல்லவர்கள் என்னும் நூலில் இதனை மேற்கோள்காட்டியுள்ளார்.

6

இந்தச் சாசன அறிக்கை எழுதிய கே. வி. சுப்பிரமணிய ஐயர், தாம் எழுதிய Ancient Dekhan' என்னும் நூலிலும், தெள்ளா றெறிந்த நந்திவர்மன் காலத்திலிருந்த பாரத வெண்பா பாடிய பெருந்தேவனாரே, அகநானூறு புறநானூறு முதலிய தொகை நூல்களைத் தொகுத்து அவற்றிற்குத் கடவுள் வாழ்த்துப் பாடினார் என்று எழுதுகிறார்.

6

பாரத வெண்பா பாடிய பெருந்தேவனார் சங்கத் தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடினார் என்று கூறுவது ஒப்புக் கொள்ளத்தக்கது அல்ல. இவர், கடவுள் வாழ்த்துப் பாக்களைப் பாடியதாக யாதொரு சான்றும் கிடையாது. இவருக்கு முன்பு சில பெருந்தேவனார்கள் இருந்தார்கள். அப்பெருந் தேவனார்களில் இருவர் பாரதத் தைத் தமிழில் பாடினார்கள். அவர்களில் ஒருவர் சங்கத் தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடினார்.

தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்த பாரத வெண்பா பாடிய பெருந்தேவனார், சங்கத்தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடினார் என்றால், அவர் காலத்தில் தான் அந்தத் தொகை