பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

"

இருக்கவேண்டும். ஆனால், பெருந்தேவனார், தம்மைப் போற்றிய அரசன் தெள்ளாற்றுப் போர் வென்ற பல்லவ அரசன் என்று கூறுகிறார். (Annual Reort for 1899-99, Para 16) இந்தப் பல்லவ அரசன் தெள்ளாறெறிந்த நந்திப் போத்தரசன் என்றால், - இவனுடைய சாசனங்கள் தமிழ் நாட்டில் காணப்படுகின்றன பெருந்தேவனார் கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவராதல் வேண்டும். சின்னமனூர் செப்பேடு கூறுகிற பாரத மொழி பெயர்ப்பு, பாரத வெண்பாவில் உள்ள பாரதமாகுமானால், இச்செயல், பாண்டிய அரச பரம்பரையில், கடந்துபோன முதல் பாண்டியர்கள் மேல் ஏன் ஏற்றிக் கூறப்பட வேண்டும் என்பதற்குக் காரணம் தெரியவில்லை. பாரதம் பாடியது, ஏதோ ஒரு அரசன் அல்லது அரசர்கள் காலத்தில் நிகழ்ந்திருக்கக் கூடும். அந்த அரசர் பெயரைச் சாசனம் எழுதியவர் சாசனத்தில் குறிப்பிட விருப்பமில்லாதவராக இருந்தார்போலும் என்றால், இவ்வாறு கருதுவதற்குச் சான்றுகள் கிடையா. இந்தச் சாசனத்தில் மகாபாரத மொழிபெயர்ப்பு என்று குறிக்ப்படுவது கடைச் சங்க (மூன்றாம் சங்கம்) காலத்தில் செய்யப்பட்ட பாரத மொழி பெயர்ப்பு என்று தற்காலிகமாக ஒப்புக்கொள்ளலாம். அது, பெருந்தேவனாருக்கு முன்பு செய்யப் பட்டிருக்கவேண்டும். மதுரையில் சங்கம் வைத்தது என்பது மதுரையில் நிறுவப்பட்ட மூன்று சங்கங்களில் கடைசியானது. அரிகேசரி மாறவர்மனுக்குக் கூறப்பட்ட காலம் சரியானதாக இருக்குமானால், கடைச்சங்கம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதிக்கு முன்னர் தோன்றியிருக்க வேண்டும்.

இந்த அரசாங்க அறிக்கையில் எழுதப்பட்டிருக்கிற தவறான கருத்துக்களைத் தமிழறிந்தவர் நன்கு அறிந்து கொள்ளக் கூடும். பாரத வெண்பா பாடிய பெருந்தேவனார் கடைச் சங்கத்தில் இருந்தவர் என்று பரம்பரைச் செய்தி கூறுவதாக இவ்வறிக்கையில் எழுதப்பட்டிருக் கிறது. இது தவறான செய்தி. அவ்வாறு பரம்பரைச் செய்தி கிடையாது. பாரதம் பாடிய பெருந்தேவனார் கடைச் சங்கத்தில் இருந்தார் என்பது பரம்பரைச் செய்தி. இதை நன்கு தெரிந்து கொள்ளாமல், இந்த அரசாங்க அறிக்கையை எழுதியவர் பாரதம் பாடியவரையும், பாரத வெண்பா பாடியவரையும் குழப்பி மழுப்புகிறார். இவ்வாறு எழுதுவது செம்மையாகத் தெரிந்து கொள்ளாததனால் ஏற்பட்ட மயக்கமாகும். இந்த மயக்கத்தின் காரணமாக, தெள்ளாறெறிந்த பல்லவன் காலத்தில் எழுதப் பட்ட பாரதத்தைப் பாண்டியன்மேல் ஏற்றிக் கூறப்பட்டதாகக்