பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

காய்சின வானை வளருங்

கனக மலையருகே

போயின காக்கையு மன்றே

படைத்தது பொன்வண்ணமே.

திருவாரூர் மும்மணிக் கோவை

7

சேரமான் பெருமாள் நாயனார் அருளிச் செய்த திருவாரூர் மும்மணிக் கோவையிலிருந்து முதல் மூன்று செய்யுள்களை மாதிரிக் காகக் காட்டுகிறோம்.

நேரிசை ஆசிரியப்பா

(இடையில் ஐஞ்சீரடி பெற்று வந்தது.)

விரிகடல் பருகி யளறுபட் டன்ன

கருநிற மேகம் கன்முக டேறி

நுண்டுளி பொழிய நோக்கிய ஒண்டொடி பொலங்குழை மின்னப் புருவ வில்லிட்(டு) இலங்கெழிற் செவ்வாய்க் கோபம்8 ஊர்தரக் கைத்தலம் என்னும் காந்தள் மலர முத்திலங் கெயிறெனும் முல்லை யரும்பக் குழலும் சுணங்கும் கொன்றை காட்ட எழிலுடைச் சாயல் இளமயில் படைப்ப

உள்நிறை உயிர்ப்பெனும் ஊதை யூர்தரக் கண்ணெனப் பெயரிய கனம்9 மழை பொழிதலின் ஒண்ணிறக் தஞ்சனக் கொழுஞ்சே றலம்பி எஞ்சா மணியும் பொன்னும் மாசறு வயிரமும் அணிகிளர் அகிலும் ஆரமும்2° உரிஞ்சிக் கொங்கை என்னும் குவட்டிடை இழிதரப் பொங்குபுனல்21 காட்டி யோனே கங்கை வருவிசை தவிரித்த வார்சடைக் கடவுள் அரிவை பாகத் தண்ணல் ஆரூர்

எல்லை இரும்பலி சொரியும்

கல்லோ சென்ற காதலர் மனமே.

இச்செய்யுள், பருவம்நீடு பருவரல் என்னும் துறையின் பாற்படும்: