பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. தமிழிலக்கியம்*

திருநாவுக்கரசர் திருப்பாடல்கள்

மகேந்திரவர்மன் இயற்றிய மத்த விலாசம் வடமொழியில் எழுதப்பட்டது. இவன் காலத்தில் இயற்றப்பட்ட தமிழிலக்கியம் இப்போது நாம் அறிந்தவரையில் திருநாவுக்கரசரின் தேவாரப் பாக்கள் ஒன்றுதான். அத் தேவாரப் பாக்களும் முழுவதும் நமக்குக் கிடைக்க வில்லை. திருநாவுக்கரசர் பாடியருளிய பதிகங்கள் 4900 என்று, சுந்தரமூர்த்தி சுவாமிகள் கூறுகிறார் என்னை?

66

1

இணைகொள் ஏழேழு நூறிரும் பனுவல் ஈன்றவன் திருநாவுக் கரையன்.'

99

என்று அவர் கூறியது காண்க. திருநாவுக்கரசர் திரு ஏகாதச மாலை,

“பதிகமே றெழு நூறு பகருமா கவியோகி

பரசுநா வரசான பரமகா ரணவீசன்.

என்று கூறுகிறது. இவர் பாடியருளிய 4900 பதிகங்களுள் இப்போது உள்ளவை 312 பதிகங்கள்தாம். மற்றவை செல்லரித்துவிட்டன. எனவே, நாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்களில் ஏறக்குறைய வீசம் பங்குதான் (16 இல் ஒரு பங்குதான்) இப்போது நமக்குக் கிடைத்துள்ளன! நாவுக்கரசர் தந்த இலக்கியச் செல்வத்தில் மிகப் பெரும் பகுதியைத் தமிழ்நாடு இழந்துவிட்டது.

திருநாவுக்கரசரின் தேவாரப் பாக்கள் சொல் அழகும் பொருள் ஆழமும் உடைய இனிய செய்யுள்கள். இந்தச் செய்யுள்களில் இவருடைய கல்வியின் ஆழத்தையும் சொல்லின் ஆற்றலையும் நன்கறியலாம். இவர் தலைசிறந்த புலவர் என்பதை இவருடைய செய்யுள்கள் சான்று கூறுகின்றன. ஆழ்ந்த கருத்துள்ள இனிய கவிகளைப் பாடும் இவருடைய நாவன்மையைக் கண்டு, இவர் காலத்திலிருந்த அறிஞர்கள் இவருக்கு நாவுக்கரசர் என்று சிறப்புப்

  • மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய 'மகேந்திரவர்மன்' (1955) எனும்

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.