பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

327

பெயர் வழங்கினார்கள் இல்லை, சிவபெருமானே இப் பெயரை வழங்கினார் என்பர். திருநேரிசை, திருக்குறுந்தொகை, திரு நெடுந் தாண்டகம் முதலிய இவர் இயற்றிய செய்யுள்கள் இசைத் தமிழின் பாற்படுவன. சேக்கிழார் இவரை இன்தமிழ் ஈசர், தாண்டகவேந்தர், நாவின் மொழிக்கிறையாகிய அன்பர், இன் தமிழ்க்கு மன்னனான வாகீசத்திருமுனி, சிந்தை கரைந்துருகத்திருக் குறுந்தொகையும், தாண்டகமும், சந்த நிறை நேரிசையும் முதலான தமிழ் பாடிய பெரியார் என்று புகழ்கிறார். ஏன்? நாவுக்கரசரே, தாம் பாமாலை பாடியதைத் தம் பதிகங்களில் கூறுகிறார்.

66

“பத்திமையாற் பணிந்தடி யேன்றன்னைப் பன்னாட் பாமாலை பாடப் பயில்வித்தானை.

என்றும்,

99

“நாயேன் முன்னைப் பந்தமறுத் தாளாக்கிப் பண்கொண்டங்கே பன்னிய நூற்றமிழ் மாலை பாடுவித்தென்

சிந்தை மயக்கறுத்த திருவருளினான்.

என்றும் கூறுகிறார்.

திருநாவுக்கரசர் வேறு ஏதேனும் ஒரு காவியத்தை இயற்றி யிருந்தால், அந்தக் காவியம் தமிழ்மொழியில் தலை சிறந்த காவியமாக விளங்கியிருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. பக்தி வழியிலும், சமயத் துறையிலும் சென்ற இவர் பக்திப்பாடல்களை மட்டும் இயற்றியருளினார். இப்பாடல்களின் கம்பீரமும், சொல் நயமும், பொருள் அழகும் திருநாவுக்கரசர் பெருநாவலர் பெருநாவலர் என்று பறைசாற்றுகின்றன.

இவர் பாடிய பாடல்களில் சிலவற்றை இங்குக் காட்டுவாம்:

தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்

நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர் ஆடிப் பாடிஅண் ணாமல கைதொழ ஓடிப் போம்நம துள்ள வினைகளே.

நன்று நாடொறும் நம்வினை போயறும், என்று மின்பம் தழைக்க இருக்கலாம்;