பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

"

33

கரிகாலன் வேங்கடத்தையும் கடந்து ஆந்திர நாட்டையும் கலிங்க நாட்டையும் வென்று அரசாண்டான் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது, சோழன் ஆட்சி கலிங்கம் வரையில் சென்றதாலே, தமிழ் நாட்டின் எல்லை (தமிழ் மொழி வழங்கும் எல்லை) கலிங்கம் என்று யாரேனும் கூறுவரோ? கூறமாட்டார் அல்லவா? எனவே சிவராசபிள்ளை சோழ இராச்சிய எல்லையுடன் தமிழ கத்தின் மொழி எல்லையை இணைத்து அது காரணமாகத் தொல்காப்பியர் இரண்டாம் கரிகாலன் காலத்துக்குப் பிற்பட்டவர் என்று முடிவு கூறுவது சரித்திர ஆராய்ச்சிக்குச் சிறிதும் பொருந்தாது.

று

அருவா நாடும் அருவாவடதலை நாடும் (தொண்டை மண்டலம்) தமிழ் நாடு தோன்றிய காலம் முதல் தமிழகத்தின் பகுதியாகவே இருந்து வந்தன. அதன் வட எல்லையாகிய வேங்கடமும் தமிழகத்தின் வட எல்லையாகவே இருந்து வந்தது. அதனால்தான் பனம்பாரனாரின் பாயிரம், வேங்கடத்தை வடவெல்லையாகக் கூறிற்று. தமிழகத்தின் வட எல்லையாகிய வேங்கடத்துக்கும், அது பிற்காலத்தில் சோழன் கரிகாலன் ஆட்சி எல்லையாக அமைந்ததற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இது வேறு செயல், அது வேறு செயல். இதையறியாமல், சிவராசபிள்ளை இரண்டையும் பொருத்தி இணைத்துக்காட்டி, அது காரணமாகத் தொல்காப்பியர் காலத்தைக் கணிப்பது பிழையான பொருத்தமற்ற செயலாகும். எனவே, தொல்காப்பியம் கரிகாலன் இரண்டாமவன் காலத்திற்குப் பின்னர் (அதாவது இவர் கருத்துப்படி கி.பி. 100க்குப் பின்னர்) இயற்றப்பட்டதென்பது, இவர் காட்டிய சான்றுப்படி ஏற்றுக் கொள்ளத்தக்கது அன்று.

இனி, புறநானூற்றுச் செய்யுட்கள் இயற்றப்பட்ட காலத்துக்குப் பிறகு தொல்காப்பிய இலக்கணம் எழுதப்பட்டது என்று சிவராசப் பிள்ளை கூறுவதும் பிழையான கருத்தாகும். நேர்மாறாகத் தொல்காப் பியர் காலத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் புறநானூற்றுச் செய்யுட்கள் பாடப்பட்டன என்பதற்குப் புறநானூற்றிலேயே சான்றுகள் கிடைக்கின்றன. அச்சான்றுகளாவன:

‘சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே

அ ஐ ஔவெனும் மூன்றலங் கடையே'

என்பது தொல். எழுத்ததிகாரம், 29-ம் சூத்திரம். அ, ஐ, ஔ என்னும் எழுத்துடன் சேர்ந்து சகர எழுத்து மொழிக்கு முதலில் வராது. மற்ற