பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

1.

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே

அடங்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே

ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே

உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே

பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே

காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே. எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ

எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன் கழலடியே கைதொழுது காணின் அல்லால் ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்

ஒக்க அடைக்கும்போது உணர மாட்டேன் புண்ணியனே உன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

அடிக்குறிப்புகள்

திருமழிசையாழ்வார் தமது பாசுர மொன்றில் குணப்பரன் என்னும் பெயரைக் கூறுகிறபடியினாலே அவர் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்தவர் என்று சிலர் கருதுகிறார்கள்.

காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன் ஆப்பங்கொழியவும் பல்லுயிர்க்கும் - ஆக்கை கொடுத்தளித்த கோனே குணப்பரனே யுன்னை விடத்துணியார் மெய் தெளிந்தார் தாம்.

என்பது திருமழிசையாழ்வார் பாடல். இதில் மகாவிஷ்ணுவைக் குணப்பரனே என்று விளிக்கிறார். குணப்பரன் என்பது, குணபரன் என்னும் சிறப்புப் பெயரையுடைய மகேந்திரவர்மனைக் றியதாகச் சிலர் தவறாக நினைத்துக்கொண்டு, திருமழிசையாழ்வார் மகேந்திரவர்மன் காலத்தவர் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று.