பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. திருநாவுக்கரசர் தேவார ஆராய்ச்சி*

1. பழமொழிகளும் உவமைகளும்

திருநாவுக்கரசர் தம் பதிகங்களில் ஆங்காங்கே பழமொழிகளை யும் உவமைகளையும் எடுத்தாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றைக் காட்டுவோம்.

கனியிருக்கக் காய் கவர்தல். முயல்விட்டுக் காக்கைப் பின் போனதுபோல். அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டதுபோல, பனிநீரால் பாவை செய்வதுபோல. ஏதன்போர்க்கு ஆதன் போல. இருட்டறையில் மலட்டுப் பசுவைக் கறப்பதுபோல. விளக்கிருக்க மின் மினியில் தீக்காய்ந்தது போல. பாழூரில் பயிக்கம் புக்கது போல. (பயிக்கம் பிச்சை.) தவம் இருக்க அவம் செய்தல். கரும்பு இருக்க இரும்பைக் கடித்தல்போல. இப் பழமொழிகள் திருவாரூர்ப் பழ மொழிப் பதிகத்தில் வந்துள. மேலும், இவர் எடுத்தாண்ட பழமொழிகள் வருமாறு:-

=

“நரிவரால் கவ்வச் சென்று நற்றசை இழந்த தோற்றம்.

66

(திருவதிகை நேரிசை, 5)

'தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவா றொன்று மின்றி விலக்குவா ரிலாமை யாலே விளக்கதிற் கோழி போன்றேன்.

"பழியுடை யாக்கை தன்னில் பாழுக்கே நீரிறைத்து

66

66

வழியிடை வாழ மாட்டேன் மாயமுந் தெளிய கில்லேன்.

‘பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன் உற்றலால் கயவர் தேறார் என்னுங் கட்டுரையோ டொத்தேன். (திருக்கடவூர் நேரிசை, 5,6,8)

'பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை ஓம்பிநீ யுய்யக் கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே.’

(ஒற்றியூர்நேரிசை)

  • மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய 'மகேந்திரவர்மன்' (1955) எனும் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.