பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

உயிர்நிலை யுடம்பே காலாய் உள்ளமே தாழி யாகத் துயரமே ஏற்ற மாகத் துன்பக்கோ லதனைப் பற்றிப் பயிர்தனைச் சுழிய விட்டுப் பாழ்க்குநீ ரிறைத்து மிக்க அயர்வினால் ஐவர்க் காற்றேன் ஆரூர்மூ லட்ட னாரே.

335

(திருவாரூர் நேரிசை, 8)

"சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவுஞ்செய்ய மத்துறு தயிரே போல மறுகுமென் உள்ளந் தானும்.

(திருவாரூர் நேரிசை, 9)

வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத் தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில் திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல் தெளிவிலாதேன் இளைத்துநின் றாடு கின்றேன் என்செய்வான் தோன்றி னேனே.

66

ஓடுநீரினை ஓட்டைக் குடத்து அட்டி

ழடி வைத்திட்ட ழர்க்கனோ டொக்குமே.

(குறைந்த திருநேரிசை)

(பாவநாசக் குறுந்தொகை, 9)

“கூவல் ஆமை குரைகடல் ஆமையைக் கூவ லோடுஒக்கு மோகடல் என்றல்போல்.

(ஆதிபுராணக் குறுந்தொகை, 5)

"பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப மத்தார் தயிர்போல் மறுகும் என்சிந்தை, மறுகொழிவி.

99

(திருச்சத்திமுற்றம் திருவிருத்தம், 3)

திருநாவுக்கரசர் திருக்குறள் கருத்துக்களையும், திருக்குறள் சொற்றொடர்களையும் சில இடங்களில் எடுத்தாள்கிறார். அவை :-

“சொற்றுணை மாலைகொண்டு தொழுதெழு வார்கட்கெல்லாம் நற்றுணை யாவர்போலும் நாகவீச்சர வனாரே.

99

(திருநாகேச்சரம்நேரிசை, 3)