பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

339

"செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம்பழ மினிய நாடித் தங்கயந் துரந்துபோந்து தடம்பொய்கை யடைந்து.

66

99

“சேலுடைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச்சரம்.

“செய்த்தலை வாளைகள் பாய்ந்துகளுந் திருவேதிகுடி.

இதனால் இறால், மலங்கு, வாளை, கயல், சேல், வரால், கெளிறு, கெண்டை என்னும் மீன்களின் பெயர்கள் தெரிகின்றன.

கீழ்க்கண்ட செய்யுளடியில் நெல் வகைகளில் சில பெயரைக் கூறுகிறார் :-

"பெரிய செந்நெல் பிரம்புரி சேந்தசாலி திப்பியமென்றி வையகத் தரியுந் தண்கழனி யணி யாரூர்....

3. கட்டங்கம்

وو

சிவபெருமான் தமது கையில் கட்டங்கம் என்றும் கட்டுவாங்கம் என்றும் பெயருடைய ஆயுதத்தை வைத்திருக்கிறார் என்று திருநாவுக்கரசர் தம்தேவாரப் பாடல்களில் பல இடங்களில் கூறுகிறார். சில இடங்களில் கட்டங்கக் கொடி என்று கூறுகிறார். அப்பருக்குப் பிற்பட்ட காலங்களில் கட்டுவாங்கத்தைப்பற்றிய செய்தி நூல்களில் கூறப்படவில்லை. கட்டங்கம் ஏந்திய சிவபெருமானுடைய திருவுருவங்கள் காணப்படவில்லை. கட்டங்கம் அல்லது கட்டுவாங்கம் என்றால் எனன? சிறுகோலின் ஒரு நுனியில் மண்டையோட்டைக் கட்டியிருக்கம் ஆயுதத் திற்குக் கட்டங்கம் என்பது பெயர். இதன் உருவ அமைப்பைப் பல்லவர் காலத்துச் சிற்பங்களில் காணலாம்.

நாவுக்கரசர் தமது தேவாரத்தில் கட்டுவாங்கத்தைக் குறிப்பிடுகிற பகுதிகள் இவை:-

“கட்டங்கம் தோள்மேல் வைத்தார்.” “கைகொள்சூலத்தர் கட்டு வாங்கத்தினர்.” கட்டுவாங்கம் காபலங்கைக் கொண்டிலர்.' காதார் குழையினர் கட்டங்கத்தர் கயிலை மாமலையார். கல்லலகு நெடும் புருவக் கபால மேந்திக் கட்டங்கத்தோடுறைவார் காப்புக்களே. கட்டங் கந்தாமொன்று கையிலேந்தி. "நேசர் அடைந்தார்க்கு அடையாதார்க்கு நிட்டுருவர், கட்டங்கர், நினைவார்க்கென்றும் ஈசர். “கட்டங்கம் ஒன்றுதன் கையிலேந்தி.” “காபாலங் கட்டங்கக் கொடியர் போலும்." “கட்டங்கக் கொடி துடி கைக்கொண்டார் போலும்.” “கங்காள வேடத்