பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

உயிரெழுத்துடன் சேர்ந்து வரும் என்பது இதன் கருத்து. இந்தத் தொல்காப்பிய இலக்கணத்துக்கு மாறாகப் புறநானூற்றிலும் வேறு சங்கச் செய்யுள்களிலும் சொற்கள் வந்துள்ளன:

‘இருங்கரை நின்ற உப்பொய் சகடம்' (குறும். 165 :3)

‘சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே' (புறம். 202 : 2)

‘ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்' (பெரும்பாண்.50) ‘நன்றாய்ந்த நீள்நிமிர் சடை' (புறம். 166 : 1)

'புறந்தாழ் புரிசடை' (புறம். 251: 7)

“தில்லையன்ன புல்லென் சடையோன்” (புறம். 252 : 2)

‘அருஞ்சமஞ் சிதையத் தாக்கி' (புறம். 72 : 8)

யகர எழுத்தைப்பற்றித் தொல்காப்பியம் கூறுவது இது:

‘ஆவோ டல்லது யகரம் முதலாது’

என்பது தொல். எழுத்ததிகாரம் 32ஆம் சூத்திரம்.

யகர எழுத்து ஆகாரத்தோடு சேர்ந்து மொழிக்கு முதலில் வரும். மற்ற உயிரெழுத்துடன் சேர்ந்து மொழிக்கு முதலில் வராது என்பது இதன் கருத்து. இந்தச் சூத்திரத்துக்கு மாறாக யகரத்தையும் யூகாரத்தை யும் முதலாகவுடைய சொற்கள் புறநானூற்றுச் செய்யுள்களிலும் வேறு சங்கச் செய்யுள்களிலும் காணப்படுகின்றன:

‘யவனர் தந்த வினைமாண் நன்கலம்' (அகம். 149 : 9)

‘யவனர் நன்கலந் தந்த தண்கமழ் தேறல்' (புறம் 56 : 18) 'யூபம் நட்ட வியன்களம்' (புறம். 15 : 21)

'எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்' (புறம். 224 : 8)

'பிணை யூபம் எழுத்தாய' (மதுரைக். 27)

ஞகர எழுத்தைப்பற்றித் தொல்காப்பியர் கூறுவது இது:

‘ஆஎ ஒள எனும் மூவுயிர் ஞகாரத் துரிய'

என்பது தொல். எழுத்து, 31 ஆவது சூத்திரம் ஞகார எழுத்து ஞா, ஞெ, ஞொ என்னும் எழுத்துக்களை முதலாகவுடைய சொற்களில் வரும்.