பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

66

முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்.

99

341

66

"செந்தமிழோடு ஆரியனைச் சீரியனை.

66

66

'வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண். இவ்வாறே ஞானசம்பந்தரும் கூறுகிறார் :-

"தம்மலரடி யென் றடியவர் பரவத்

தமிழ்ச் சொலும் வடசொலுந் தரணிமேற் சேர வம்மலர்க் கொன்றை யணிந்த வெம்மடிகள் அச்சிறுபாக்கம தாட்சி கொண்டாரே.

"செந்தமிழர் தெய்வ மறைநாவர்

செழுங்கலை தெரிந்த வவரோடு

அந்தமில் குணத்தவர்களர்ச் சனைகள்

செய்ய அமர்கின்றவனூர்.

“தென்சொல் விஞ்சமர் வடசொற்றிசைமொழி எழில்நரம் பெடுத்துத் துஞ்சுநெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புகலூர்.

"செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித்

திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி.

99

99

99

- திருமங். திருநெடு - 4.

என்று இவ்வாறு ஆரியக்கலையும் தமிழ்க்கலையும் ஒன்றென்று கூறிய நாவுக்கரசரும்ஞானசம்பந்தரும், வேறு வழியாகவும்இந்தக் கலப்பினைத் தம் தேவாரங்களில் வற்புறுத்திக் கூறுகிறார்கள். அஃதாவது, இருக்கு ஏசுர் சாமம், அதர்வணம் என்னும் வடமொழி நான் மறையும் அறம் பொருள் இன்பம் வீட்டைக் கூறும் தென்மொழி நான் மறையும் ஒன்றே; இவ்விரண்டையும் அருளியவர் சிவபெருமானே; இரு மறைகளும் ஒரே பொருளைக் கூறுகின்றன என்பதைத் தம் தேவாரப் பாடல்களில் ஆங்காங்கே கூறிச் செல்கிறார்கள். முதர்லில் திருநாவுக்கரசர் கூறியதைக் காண்போம்:

66

"தூய காவிரியின் நன்னீர் கொண்டு இருக்கு ஓதி ஆட்டி, என்றும், சாமத்து வேதமாகி நின்றதோர் சம்புதன்னை என்றும், சாம வேதத்தர் எந்தையும் எந்தை தந்தையும் ஆய ஈசர் என்றும், “வேதத் தோடாறங்கம் சொன்னார் போலும்” என்றும், “ என்றும், “அருமறையோ