பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

சிவபெருமான் ஆலமரத்தின் கீழிருந்து அறநெறியை அருளிச் செய்தார் என்று நாயன்மார்கள் கூறுவது போலவே, திருமழிசை ஆழ்வாரும் தாம் அருளிய நான்முகன் திருவந்தாதியில் (17) கூறுகிறார்:

66

"ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு

மேலை யுகந்துரைத்தான் மெய்த் தவத்தோன்.

என்பது அவர் வாக்கு.

இவ்வாறு ஆரியத் திராவிடக் கலப்பினை நாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் கூறுவதுபோலவே பிற்காலத்தவரான சேக்கிழாரும் தமது பெரிய புராணத்தில் கூறுகிறார். அவற்றில் சிலவற்றைக் காட்டுவோம் :-

66

ஆதிஅரு மறைவழக்கம் அருகிஅரன் அடியார்பால் பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண்டு.

என்றும்,

66

"மன்னிய சைவவாய்மை வைதிக வழக்கமாகும் நன்னெறி திரிந்துமாறி நவைநெறி நடந்ததன்றே.

என்றும்,

66

‘பரசமயத் தருக்கொழியச் சைவமுதல்

வைதிகமும் தழைத்தோங்க.

என்றும்,

وو

“வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க. என்றும் சேக்கிழார் வைதிக நெறியையும் சைவ நெறியையும் தனித்தனியாகவும் இணைத்தும் ஓதுவது காண்க.

இதனால் இந்துமதம் (சைவம் வைணவம்) என்பது திராவிட சமயமும், வைதிக சமயமும், பக்தியியக்கமும் கலந்துண்டாகிய ஒரு மதம் என்பது தெளிவாகிறது.

5. அகப்புறச் சமயங்கள்

திருநாவுக்கரசர் காலத்திலே சைவ சமயத்தில் சில உட் பிரிவு களும் இருந்தன. அந்த உட்பிரிவுகளை அகப்புறச் சமயம் என்று கூறுவர். அவை பாசுபதம் மாவிரதம் காபாலிகம் வைரவம் என்பன. பாசு