பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

வடநாட்டில் காயாரொகணத்தில் (காரோணத்தில்) தோன்றிய இந்த லகுலீ பாசுபத மதமும் அதன் பிரிவுகளும் அப்பர் சம்பந்தர் காலத்துக்கு முன்பே தமிழ்நாட்டிலும் வந்து சிற்சில இடங்களில் நிலைபெற்றிருந்தன. நாகைக்காரோணம், குடந்தைக்காரோணம் என்னும் இரண்டு காரோணங்களை அப்பரும் சம்பந்தரும் தம் பதிகங்களில் பாடியுள்ளார்கள். திருவாரூரிலும் சீகாழியிலும் இந்தக் காபாலிக பாசுபதர்கள் இருந்தனர் என்பதை அப்பர். சம்பந்தர் தேவாரத் தினால் அறிகிறோம் காஞ்சிபுரத்தையும் காரோண க்ஷேத்திரம் என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது. அதற்கு ஏற்பவே அப்பர் சுவாமிகளும் அவர் காலத்தில் இயற்றப்பட்ட மத்தவிலாசமும் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலிலும் அதையடுத்த கச்சி மயானத்திலும் பாசுபதரும் காபாலிகரும் இருந்த செய்தியைக் கூறுகிறார்கள்.

பிற்காலக் கல்வெட்டுச் சாசனங்களினாலும் பாசுபதர், காபாலிகர் முதலியோர் தமிழ்நாட்டில் சில இடங்களில் இருந்தார்கள் என்பதை அறிகிறோம்.

லகுலீ பாசுபதர் திருவொற்றியூரிலும் இருந்தார்கள். சென்னைக்கு அடுத்த திருவொற்றியூர்க் கோயிலில் வட்டப் பாறை நாச்சியார் சந்நிதிக்கு எதிரில் பாசுபத மூர்த்திக்கு ஒரு கோயில் உண்டு. இக் கோயிலில் பாசுபதமூர்த்தியின் உருவம் மிக அழகாக அமைந்திருக் கிறது. அது, பெரிய புராணத்தில்,

"மடல்கொண்ட மலரிதழி நெடுஞ்சடையை வனப்பெய்தக் கடல்மண்டி முகந்தெழுந்த காளமே கச்சுருள்போல் தொடர்பங்கி சுருண்டிருண்டு தூறிநெறித் தசைந்துசெறி படர்துஞ்சின் கருங்குஞ்சி கொந்தளமா கப்பரப்பி.”

66

66

அயன்கபா லந்தரித்த இடத்திருக்கை யால்அணைத்த

வயங்கொளிமூ லைச்சூல மணித்திருத்தோள் மிசைப்பொலியத் தயங்குசுடர் வலத்திருக்கை தமருகத்தின் ஒலிதழைப்பப் பயன்தவத்தால் பெறும்புவியும் பாததா மரைசூட.

و,

'அருள்பொழியுந் திருமுகத்தில் அணிமுறுவல் நிலவெறிப்ப மருள்பொழிமும் மலஞ்சிதைக்கும் வடிச்சூலம் வெயிலெறிப்ப.

(சிறுத்தொண்டர், 26, 34, 35)