பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி “தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை யொருபாலும்

66

அரியுருவம் திகழ்ந்த செல்வர்.

“திருமாலோர் பங்கத்தன் சாண்.

66

குடமாடி யிடமாகக் கொண்டான் கண்டாய்.

'மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார்.

353

இவர் காலத்தில்இருந்த திருஞானசம்பந்தரும் இவ்வாறே சிவபெருமான் திருமாலைப் பாகமாகவுடையவர் என்று கூறுகிறார். மற்றும் திருநாவுக்கரசர், திருமால் அணியும் துழாய் (துளசி) மாலையைச் சிவபெருமானும் அணிந்திருக்கிறார் என்று கூறுகிறார் :

66

தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை

துன்னிய செஞ்சடைமேல்

வாங்கான் மதியமும் வாளர

வுங்கங்கை தான்புனைந்தான்.

99

(திருசெய்த்தானம் திருவிருத்தம்,9.)

இதைப்போன்றே நம்மாழ்வாரும், சிவபெருமான் அணியும் திருநீற்றினைத் திருமாலும் அணிகிறார் என்று கூறுகிறார்.

66

“கரிய மேனி மிசைவெளிய நீறு சிறிதே யிடும்

பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்

என்று அவர் கூறியது காண்க.

தன்னை.

99

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் கூறியது போலவே, ஆழ்வார்களும், திருமால் சிவபெருமானின் ஒரு கூறாக நின்று அரிஹர மூர்த்தியாக விளங்குகிறார் என்று கூறுகிறார்கள். அவர்கள் கூறுவன வருமாறு :-

66

"பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரமனைத்தன் உந்தியிலே தோற்று வித்து.

99

(திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி)