பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. பின்னிணைப்பு* 1. வெள்ளிப் பாட்டு

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில், இடைச்செருகலாகத் திருக்காரோணப்பதிகம் ஒன்று உண்டு. அதற்கு வெள்ளிப்பாட்டு என்பது பெயர். வெள்ளியம்பலத் தம்பிரான் சுவாமிகள் இயற்றிய தாகலின் இதற்கு இப்பெயர் அமைந்தது. இவர் தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்தவர். ஆதிகுமரகுருபர சுவாமிகளிடம் தமிழ்க்கல்வி பயின்றவர். இவரே ன்னொரு வெள்ளிப்பாட்டைத் திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரத் தில் இடைச்செருகலாக நுழைத்திருக்கிறார். சுந்தரர் தேவாரத்தில் இவர் நுழைத்த வெள்ளிப் பாட்டைக் கீழே தருகிறோம். இதில் 4-ஆம் பாட்டில் எலும்புங்கிலும்பும் என்னும் சொல் பயின் றிருப்பது காண்க. பொன்னா மிதழி விரை மத்தம்

பொங்கு கங்கை புரிசடைமேல்

முன்னா வரவ மதியமுஞ்

சென்னி வைத்தல் மூர்க்கன்றே

துன்னா மயூரஞ் சோலைதொறு மாடத்தூரத் துணைவண்டு

தென்னா வென்னுந் தென்னாகைத் திருக்காரோணத் திருப் பீரே.

வரைக்கைவேழ முரித்துமா

னடமாட்டானால் மனைதோறும்

இரக்கை யொழியீர் பழியறியி

லேற்றைவிற்று நெற்கொள்ளீர்

முரைக்கைப் பவழக் கால் காட்ட மூரிச் சங்கத்தொடு முத்தந்

திரைக் கைகாட்டுந் தென்னாகைத்

திருக்கா ரோணத் திருப்பீரே.

  • மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய மூன்றாம் நந்திவர்மன்' (1958) எனும் நூலில் இடம் பெற்றுள்ள பின்னிணைப்பு. இதில் பல்வேறு செய்திகள் இடம் பெற்றுள்ளன.

1

2