பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

இந்தச் செய்யுள்களிலே வரகுண பாண்டியனை மாணிக்கவாசகர் குறிப்பிடுவது காண்க. குறிப்பிடுவது மட்முமல்லாமல், அப்பாண்டிய னைத் தமது காலத்திலிருந்தவன் என்னும் கருத்துப்பட நிகழ்காலத்தில் கூறுகிறார். “வரகுணனாம் தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான்” என்று கூறியதிலிருந்து இதனை அறியலாம்.

இந்த வரகுண பாண்டியனிடத்திலே, மாணிக்கவாசகர் தென்னவன் பிரமராயன் என்னும் சிறப்புப் பெயருடன், அமைச்சராக இருந்தார் என்று அவர் வரலாறு கூறுகிறது. வரகுண பாண்டியனும், மாணிக்க வாசகரைப் போலவே, மிகுந்த சிவபக்தன் என்பது எல்லோரும் அறிந்ததே. பட்டினத்துப்பிள்ளையார், தாம் அருளிய திருவிடை மருதூர் மும்மணிக்கோவையில் வரகுண மகாராசனின் சிறந்த சிவத் தொண்டுகளைப் புகழ்ந்து பாராட்டுகிறார். திருவிளையாடற் புராணங் களும் வரகுண பாண்டியனுடைய சிவபக்தியைப் புகழ்கின்றன.

வரகுண பாண்டியனின் சிவத்தொண்டுகள் பலவற்றிலும், திருவெண்ணீற்றின்மேல் அவனுக்கிருந்த பக்தி பெரிதும் போற்றப் படுகிறது. சேவகர், கள்ளன் ஒருவனைப் பிடித்துக் கொண்டுபோய் வரகுண பாண்டியனிடம் விட்டபோது, அக் கள்ளன் திருநீறு அணிந் திருந்ததைக் கண்டு வரகுண பாண்டியன் அவனை விடுவித்தாராம்.

"வெள்ளைநீறு மெய்யிற் கண்டு

கள்ளன் கையில் கட்டவிழ்ப் பித்தும்

என்று பட்டினத்துப் பிள்ளையார் வரகுணரின் திருநீற்றுப் பக்தியைப் புகழ்கிறார். வரகுண பாண்டியன், திருவெண்ணீற்றைப் பக்தியோடு அணிவது மட்டுமல்லாமல்! போருக்குச் செல்லும்போதும், உடம்பு முழுவதும் வெண்ணீறு அணிந்து கொண்டு செல்வது வழக்கம். ஒரு சமயம் அவன் அவ்வாறு நீறணிந்து போர்க்களம் சென்ற போது, பகைவருடைய அம்பு இவ்வரசன் காலில் தைத்து ஊடுறுவியது. அப்போது, வரகுணன், “நீறு அணியாத இடத்தில் அம்பு தைத்தது அமையும்” என்று கூறினானாம், இதனை, நம்பியாண்டார் நம்பியார் தமது கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தில் கூறுகிறார்.

66

"பொடியேர்தரு மேனிய னாகிப் புசல்புக வடிக்கே கடிசேர்கணை குளிப்பக் கண்டுகோயில் கருவிஇல்லா அடியே பட அமையுங்கணை என்ற வரகுணன்தன் முடியே தருகழல் அம்பலத்தாடிதன் மொய்கழலே

1. கோ. தி.வி - 62.