பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

361

வரகுண பாண்டியனின் திருநீற்றுப் பக்தியை, அவனுடைய பொடியேர் தருமேனியைச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் தமது தேவாரத் தில் சிறப்பித்துக் கூறுகிறார். திருவதிகை வீரட்டானப் பதிகத்தில், 8- ஆம் செய்யுளில், சுந்தர மூர்த்தி சுவாமிகள் இவ்வரசனை இவ்வாறு புகழ்கிறார்.

“பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதை

பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல் தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற் சோராத சிந்தையான் செக்கர் வானந்தி

இதில் “பொடியாடு திருமேனி நெடுமாறன்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் கூறுவது, வரகுண பாண்டியனையே யாகும். என்னை? வரகுண பாண்டியனுக்கு மாறன்சடையன் என்னும் பெயரும் சாசனங்களில் கூறப்படுகிறது. மாறன் என்னும் பெயரைத்தான் சுந்தரர் நெடுமாறன் என்று கூறுகிறார். இந்த நெடுமாறன், சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் கூறுகிற நெடுமாறனாக இருக்கலாகாதோ எனின், இல்லை. இந்த நெடுமாறன் அந்த நெடுமாறன் ஆகான். அந்த நெடுமாறன், “நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன்.” இந்த நெடுமாறனோ, “பொடியாடு திருமேனி நெடுமாறன்.” எனவே, இவன் வேறு, அவன் வேறு என்பது திட்டமாகத் தெரிகிறது. "இந்தப் பொடியாடு திருமேனி நெடுமாறனை த் தான், நம்பியாண்டார் நம்பி தமது கோயில் திருப்பண்ணியர் விருத்தத் தில் “பொடியேர் தருமேனியனாகிய வரகுணன்” என்று கூறினார்.

எனவே, திருக்கோவையாரில் மாணிக்க வாசகர் கூறுகிற வரகுண பாண்டியனும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தேவாரப்பதிகத் தில் கூறுகிற நெடுமாறனும் (நெடுமாறன் - மாறன், சடையன் - வரகுண பாண்டியன்) ஒருவனே என்பது தெரிகிறது. சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனாருடன் பாண்டி நாட்டில் தலயாத்திரை செய்தபோது, பாண்டியன் அரண்மனையில் தங்கினார் என்று கூறப்படுகிறது. அந்தப் பாண்டியன் வரகுண பாண்டிய னாகத்தான் இருக்கவேண்டும். அப்போது, அப்பாண்டியனின் மருகனாகிய சோழ அரசனும் பாண்டியன் அரண்மனையில் தங்கியிருந்தான். (சோழ அரசன் அக்காலத்தில் பல்லவ அரசனுக்குக் கீழடங்கி யிருந்தான்.) சேர சோழ பாண்டிய அரசர் மூவரும் ஒருங்குசேர்ந்திருந்ததைச் சுந்தரர் தமது தேவாரத்தில் பாடுகிறார் :