பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

363

நம்பி தமது (பழைய) திருவிளையாடற் புராணத்தில் கூறுகிற வரகுண பாண்டியனும், நம்பியாண்டார் நம்பி கூறுகிற வரகுணபாண்டியனும் ஒரே பாண்டியன் என்பதில் ஐயம் இல்லை. என்னை? வரகுண பாண்டியன் என்னும் பெயரையுடைய பாண்டியர்களில் ஒருவன் மட்டும் மிகுந்த சிவபக்தியுடையவனாக இருந்தான் ஆகலின். இந்த வரகுணபாண்டியன், பல்லவ அரசர்களான தந்திவர்மன் காலத்திலும் அவன் மகனான நந்திவர்மன் காலத்திலும் இருந்தவன். இவனே முதலாம் வரகுணபாண்டியன்.

இந்த வரகுணபாண்டியன், பல்லவருக்குரிய சோழ நாட்டைத் தந்திவர்மன் காலத்தில் வென்று அரசாண்டான் என்று முன்னரே கூறினோம். அவன் சோழநாட்டை வென்று அரசாண்டபடியினால்தான் சோழநாட்டிலிருக்கும் திருவிடைமருதூர், சிதம்பரம் முதலிய இடங்களில் நெடுநாள் தங்கிச் சிவபெருமானை வழிபட்டான். மேலும் அவன் சோழநாட்டிலிருந்த இடவை என்னும் ஊரை வென்றான் என்று முன்னரே கூறினோம். அந்த இடவை என்னும் ஊரை, வரகுணன் காலத்தவரும் அவ்வரசனுக்கு அமைச்சராக இருந்தவரும் ஆன மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் கூறுகிறார். இந்த இடவையை அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய அடியார்கள் தமது தேவாரத்தில் கூறவில்லை. மாணிக்கவாசகர், வரகுணபாண்டியன் இடவையை வென்று அங்கத் தங்கிய காலத்தில் தாமும் தங்கியிருந்தார் போலும். ஆகவே, அவ்வூர் சிவபெருமானைத் தமது திருவாசகத்தில் குறிப்பிட்டார் எனக் கருதலாம். அவர் இடவையைக் கூறும் செய்யுள் இது:

“மால் அயன் வானவர்கோனும் வந்து வணங்கஅவர்க்கு அருள்செய்த ஈசன்

ஞாலம் அதனிடை வந்திழிந்து

நன்னெறி காட்டிநலம் திகழும்

கோலமணி அணிமாட நீடு

குலாவும் இடவை மடநல்லாட்கு

சீலம்மிகக் கருணை அளிக்கும்

திறம்அறிவார் எம்பிரா னாவாரே.'

வரகுணபாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர் மாணிக்க

வாசகர். வரகுணபாண்டியனின் இசைப்புலவராக இருந்தவர் பாண

1.

திருவார்த்தை 2.