பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

365

சுந்தரமூர்த்தி, திடீரென்று ஏற்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை யொட்டித் திருத்தொண்டத்தொகை பாடினார். எதிர்பாராதபடி திடீரென்று பாடும்படி நேரிட்டபடியால், அச்சமயம் அவர் நினைவுக்கு வந்த சிவனடியார்களை மட்டும் குறிப்பிட்டார். அவர் காலத்து அடியார்கள் எல்லோரையும் கூற அவர் கருதியிருந்தால், மாணிக்கவாசகரை மட்டும் அல்லாமல், மற்றும் விட்டுப்போன ஏனைய சைவ அடியார் களையும் கூறியிருப்பார். மாணிக்கவாசகரை மட்டும் விடவில்லையே. அக்காலத்தில் சிறந்த சிவனடியாராகிய வரகுண பாண்டியனையும் கூறாமல் விட்டுவிட்டார். திருவாரூரில், கடவுளை வணங்கச் சென்றபோது அங்கிருந்த விறன் மிண்ட நாயனார், “அடியார்களை வணங்காமற் போகிற வன்றொண் டான் (சுந்தரர்) அடியார்களுக்குப் புறம்பானவன்” என்று கூற, அதைக் கேட்ட சுந்தரர், தமது அடியார் பக்தியைத் தெரிவிப்பதற்காகத் திருத் தொண்டத் தொகையைத் திடீரென்று பாடினாரேயல்லாமல், திருத் தொண்டர் பட்டியலைத் தொகுக்கவேண்டும் என்னும் கருத்தோடு பாடவில்லை. எனவே, அச்சமயம் அவர் நினைவுக்கு வந்த அடியார்களை மட்டும் பாடி முடித்தார்.

மாணிக்கவாசகர், தமது போற்றித் திரு அகவலில், “கலையார் அரிகேசரியாய் போற்றி” என்று கூறுகிறார். இதில் கூறப்படும் அரி கேசரி என்பது ஒரு பாண்டிய அரசன் பெயர் என்று தவறாகக் கருதிக் கொண்டு சிலர், பாண்டியன் அரிகேசரி காலத்தில் மாணிக்கவாசகர் இருந்தார் என்று ஆராய்ச்சி செய்ய முற்படுகின்றனர். அவர் கூறிய அரிகேசரியார் என்பது அரிகேசரி என்னும் அரசனையன்று; அரி கேசரி என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைக் குறிக்கிறது. கலைகள் பொருந்திய அரிகேசரி என்னும் ஊரில் உள்ள சிவபெருமா னுக்கு வணக்கம் என்பது அதன் பொருள். இதன் பொருளை அறியா மல் சிலர், அரிகேசரி பாண்டியன், பாண்டியன் என்னும் இரண்டு அரசர் காலத்தில் மாணிக்கவாசகர் இருந்தார் என்று கூறுகின்றனர்.

ஓர் ஆய்வாளர், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை மட்டும் துணையாகக்கொண்டு ஆராய்கிறார். பரஞ் சோதியார் திருவிளையாடல் புராணம், அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் மாணிக்கவாசகர் இருந்தார் என்று கூறுவதை ஆதாரமாகக் கொண்டு அவர் ஆராய்கிறார். பரஞ்சோதியார் திருவிளையாடலுக்கு முற்பட்ட, பழைய திருவிளையாடற்புராணம் ஒன்று இருப்பதை அவர்