பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

தெரியாமலேயிருக்கிறார். பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றிய பழைய திருவிளையாடற் பராணம் ஆராய்ச்சிக்குச் சிறிது உதவுகிறது. புதிய திருவிளையாடற் புராணமாகிய பரஞ்சோதியார்புராணம் ஆராய்ச்சிக்கு உதவாதது; சரித்திரத்துக்கு மாறுபட்ட பல கருத்துக்களை மனம்போன படி கூறுகிறது. ஆகவே, பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்தை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை யோடிருக்க வேண்டும்.

மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சிக்கு ஒரே ஒரு அகச்சான்று மட்டும் உண்டு. அதுதான், வரகுணபாண்டியனைச் சுட்டுகிற சான்று. அந்தச் சான்றைக்கொண்டு ஆராய்ந்தால், நாம் மேலே காட்டியபடி, பல்லவ அரசர்களான தந்திவர்மன் அவன் மகனான தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்னும் அரசர்கள் காலத்தில் இருந்த பாண்டியன் வரகுண மகாராசனைத்தான் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார் என்பது ஏற்படுகிறது. இந்த வரகுண மகாராசன் முதலாம் வரகுணபாண்டியன் ஆவான். ஆகவே, அவ்வரசனைக் குறிப்பிடுகிற மாணிக்கவாசகர், அவ்வரசன் காலத்தில், கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவராவார். அக்காலத்திலேயே, சில ஆண்டுகளுக்குப் பின்னர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் இருந்தார்.

66

குடமுழ நந்திசேனை வாசகனாகக் கொண்டார்” என்றும், ‘நரியைக் குதிரை செய்வானும் நரகரைத்தேவு செய்வானும்” என்றும் திருநாவுக் கரசர் கூறியுள்ளதைச் சான்று காட்டி மாணிக்கவாசகர் காலத்தைச் சிலர் ஆராய்கின்றனர். இது தவறு. இவற்றை எல்லாம் இங்கு ஆராய முற்பட்டால் இடம் விரியும் என அஞ்சி ஆராயாமல் விடுகிறோம்.

மாணிக்கவாசகர் காலத்தை ஆராய்ந்தவர்கள், கி.பி. 2-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரையில் ஒவ்வோர் காலத்தைக் காட்டியுள்ளார்கள். சிலர் கி.பி. 14-ஆம் நூற்றாண்டு என்றும் கூறினார்கள். அவைகளையெல்லாம் ஆராய விரும்புவோர் கீழ்க்கண்ட கட்டுரைகளையும் நூல்களையும் படிப்பார்களாக:

பண்டித வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் எழுதிய கட்டுரை : The Indian Review April, 1901. T. பொன்னம்பலம் பிள்ளையவர்கள் கட்டுரை : The Malabar Quarterly Review, Vol. III, p. 203. பண்டித வேதாசலம் பிள்ளை அவர்கள்: The Christian College Magazine 1904. பண்டித வேதாசலம் பிள்ளை அவர்களே (மறைமலை அடிகள்) ஷ கருத்தைத்