பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

"காடவர்கோன் கழற்சிங்கன்” என்னும் அரசனைச் சுந்தரர் தமது திருத்தொண்டத்தொகையில் கூறியது இராஜசிம்ம பல்லவனையே என்னும் கூறுகிறார்.'

இவர் கருத்தும் ஏற்கத்தக்கதன்று. இவர் கூறுகிற இரண்டாம் நரசிம்மவர்மனான இராஜசிம்மன் கி.பி. 680 முதல் 700 வரையில் அரசாண்டவன். ஆகவே, கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்த இவ் வரசனும் 9-ஆம் நூற்றாண்டிலிருந்த சுந்தரரும் ஒரு காலத்தில் இருந் திருக்கமுடியாது. சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகையில் கூறுகிற “காடவர்கோன் கழற்சிங்கன் என்பவன் இராஜசிம்ம பல்லவன்

அல்லன். வேறு ஒரு பல்லவ அரசன். திருமங்கையாழ்வார் காலத்தில் சுந்தரர் இருந்தார் என்று கூறுவதும் தவறு. சுந்தரர், திருமங்கை யாழ்வாருக்குப் பிறகு (குறைந்தது 25 ஆண்டுக்குப் பின்னர்) இக்காரணங்களினாலே இராகவையங்கார் கருத்து ஏற்கத் தக்கதன்று.

கோபாலன் அவர்கள் தாம் எழுதிய காஞ்சிப் பல்லவ சரித்திரம் என்னும் ஆங்கில நூலிலே,2 சுந்தரர் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிலே இருந்தவர் என்று கூறுகிறார். ஆனால், இந் நூற்றாண்டின் முற்பகுதி யிலா பிற்பகுதியிலா என்பதைக் கூறவில்லை.

ஸ்ரீநிவாச பிள்ளை அவர்கள், தமது தமிழ் வரலாறு (இரண்டாம் பாகம்) என்னும் நூலிலே சுந்தரர் காலத்தை ஆராய்ந்து கி.பி. 804 முதல் 825 வரையில் வாழ்ந்திருந்தார் என்று கூறுகிறார். இது சுந்தரர் கால மாகிய கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்கு உட்படுகிறது. ஆனால் அகச்சான்று கொண்டு ஆராயப்படவில்லை.

சுந்தரர் காலத்தை அகச்சான்று கொண்டு ஆராய்ந்து பார்ப்போம். சுந்தரர், தாம் பாடிய திருத்தொண்டத் தொகையில், தமது காலத்தில் இருந்த கழற்சிங்கர் என்னும் அரசரைக் குறிப்பிடுகிறார்.

66

“கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்

காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்’

என்பது அவர் வாக்கு. காடவர் (பல்லவர்) குலத்து கழற்சிங்கன் என்னும் அரசன், பேரரசன் என்றும் அவன் தமது காலத்தில் வாழ்ந்தவன் என்றும் அவன் சிறந்த சிவபக்தன் என்றும் இதில் கூறுகிறார். ஆழ்வார்கள் காலநிலை. 1929 பக்கம் 135, 136.

1.

2. History of the pallavas of Kanchi; R. Gopalan P. 160.