பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

369

உலகெலாம் காக்கின்ற பெருமான் என்று நிகழ்காலத்திலே கூறுவது கவனிக்கத் தக்கது. இதனால், கழற்சிங்கன் என்னும் அரசன் காலத்தில் சுந்தரர் வாழ்ந்திருந்தார் என்பது ஐயமின்றித் தெரிகிறது.

கழற்சிங்கன் என்னும் அரசன் யார்? அவன் எந்தக் காலத்தில்

அரசாண்டான்?

சுந்தரர் கூறிய காடவர்கோன் கழற் சிங்கனைச் சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் (கழற்சிங்கநாயனார்

விளக்கமாகக் கூறுகிறார்.

"படிமிசை நிகழ்ந்த தொல்லைப்

பல்லவர் குலத்து வந்தார்

கடிமதில் மூன்றுஞ் செற்ற

கங்கைவார் சடையார் செய்ய

அடிமலர் அன்றி வேறொன்

றறிவினிற் குறியா நீர்மைக்

கொடி நெடுந்தானை மன்னர் கோக்கழற் சிங்கர் என்பார்.

“காடவர் குரிசி லாராங்

கழற் பெருஞ்சிங்கர் தாம்

ஆடக மேரு வில்லார்

அருளினால் அமரிற் சென்று

கூடலர் முனைகள் சாய

வடபுலங் கவர்ந்து கொண்டு

நாடற நெறியில்வைக

நன்னெறி வளர்க்கு நாளில்.

புராணத்தில்) சற்று

மேலும், ழரசுடைத்தானை மன்னர்' என்றும், சிங்கர் என்றும்,2 உலகு நிகழ்ந்த பல்லவர் கோச்சிங்கர்3 என்றும் சேக்கிழார் கூறுகிறார். இதனால், கழற்சிங்க நாயனாருக்குச் சிங்கர், பெருஞ்சிங்கர், கழற்சிங்கர் என்னும் பெயர்கள் உண்டு என்பதும் அவர் பல அரசர்களைப் போரில் வென்றவர் என்பதும் வடபுலங்களையும் வென்றவர் என்பதும் சிவபெருமானிடத்தில் மிகுந்த பக்தியுடையவர் 1. செய்யுள் 4. 2. செய்யுள் 13. 3. செருத்துணை நாயனார் புராணம் 4.