பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

66

மண்ணுலகம் காவல் பூண்ட

உரிமையால் பல்லவர்க்குத் திரைகொடா

மன்னவரை மறுக்கஞ் செய்யும்

பெருமையால் புலியூர்ச் சிற்றம்பலத்தெம்

பெருமானைப் பெற்றா மன்றே.

371

என்று

என்று சுந்தரர் தமது கோயில் பதிகத்தில் கூறுகிற பல்லவ மன்னன், கழற்சிங்கனாகிய மூன்றாம் நந்திவர்மனே கொள்ளத்தகும். இதனால், இவ்வரசன் பல அரசரை வென்று பேரரசனாக விளங்கினான் என்பது தெரிகிறது.

சுந்தரர் தாம் பாடிய திருத்தொண்டத் தொகையில், இவ்வரசனைச் சிவபக்தன் என்று கூறுகிறார். சேக்கிழாரும் தமது பெரிய புராணத்தில் (கழற்சிங்க நாயனார் புராணம்) இவனைச் சிறந்த சிவபக்தன் என்று கூறுகிறார். இதற்கேற்பவே, இவனைப் பாடிய நந்திக் கலம்பகமும் “சிவனை முழுவதும் மறவாத சிந்தையான்” என்று கூறுகிறது. வேலூர் பாளையத்துச் செப்பேட்டுச் சாசனம், இவன் சிறந்த சிவபக்தன் என்பதைக் கூறுகிறது.

1

எனவே, சுந்தரர் காலத்திலிருந்த கழற்சிங்கன் என்னும் அரசன் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்பது தெரிகிறது. இவ்வரசன் ஏறக்குறைய கி.மு. 830 முதல் 854 வரையில் அரசாண்டான் என்பது அறிவோம். ஆகவே, சுந்தரமூர்த்தி நாயனார் மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் இருந்தவர் என்பது தெளிவாகிறது.

மூன்றாம் நந்திவர்மன் தெள்ளாறு, நள்ளாறு முதலிய ஊர்களில் போர் வென்றான் என்று நந்திக் கலம்பகம் கூறுகிறது. அவ்வரசன் காலத்திலிருந்த சுந்தரமூர்த்தி நாயனாரும் தெள்ளாறு, நள்ளாறு என்னும் ஊர்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைத் தமது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

"நள்ளாறு தெள்ளாற ரத்துறைவா! எங்கள் நம்பனே! வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை

என்பது அச்செய்யுள்.

1. S.I.I. Vol, II, part V page 509, line 64-65.

2. திருப்புக் கொளியூர் அவிநாசி 9.

விரும்பினாய்'

992