பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

372

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

நந்திக் கலம்பகம்

நந்திக் கலம்பகம், தெள்ளாநெறிந்த நந்திவர்மன் மேல் பாடப்பட்டது. இக்கலம்பகத்தில், நந்திவர்மனைப் பற்றிய சரித்திரக் குறிப்புகள் காணப்படுவதால், இந்நூல் முழுதும் இங்குத் தரப்படுகிறது.

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா தரவு

மண்டலமாய் அம்பரமாய் மாருதமாய் வார்புனலாய் ஒண்சுடராய் ஒளியென்னும் ஒருருவம் மூன்றுருவம் மைவடிவோ வளைவடிவோ மரகதத்தின் திகழ்வடிவோ செவ்வடிவோ பொன்வடிவோ சிவனேநின் திருமேனி.

1அருவரையி னகங்குழைய வனலம்பு தெரிந்தவுணர் பொருமதில்க ளவைமூன்றும் பொன்றுவித்த புனிதற்கும் குருமணிசே ரணிமுறுவல் குலக்கங்கை நதிபாயத் திருமுடியைக் கொடுத்தாற்கும் செம்பாகந் திறம்பிற்றே.

இலகொளிய மூவிலைவே லிறைவாநின் னியற்கயிலைக் குலகிரியு மருமறையுங் குளிர்விசும்பும் வறிதாக அலைகதிர்வேல் படைநந்தி யவனிநா ராயணனிவ் உலகுடையான் திருமுடியு முள்ளமுமே யுவந்தனையே.

அராகம்

செழுமலர் துதைதரு தெரிகணை மதனனது

எழிலுடல் பொடிபட வெரிதரு நுதலினை.

அருவரை யடியெழ முடுகிய அவுணனது ஒருபது முடியிற ஒருவிரல் நிறுவினை.

தாழிசை

வீசிகையில் கொன்றையும் வெள்ளெருக்கம் விராய்த்தொடுத்த வாசிகையி னூடேவெண் மதிக்கொழுந்தைச் சொருகினையே.

பாய்புலியி னுரியசைத்த பலபுள்ளிப் படிவமெலாம் ஆயிரவாய்க் கருங்கச்சை யழலுமிழ வசைத்தனையே.

இச்செய்யுள், பிற்காலத்தில் இடைச் செருகலாகச் சேர்க்கப்பட்டதென்று தோன்றுகிறது.