பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

சோர்மதத்த வார்குருதி சோனைநீர் எனத்துளிப்ப வேர்மதத்த கரியுரிவை யேகாசம் இட்டனையே.

திசைநடுங்கத் தோன்றிற்று நீயுண்ட திறனஞ்சம் உயிர்நடுங்கத் தோன்றிற்று நீயுதைத்த வெங்கூற்றம்.

அம்போதரங்கம்

373

அனைத்துலகில் பிறப்புநீ

அனைத்துலகில் இறப்புநீ

அனைத்துலகில் துனபமுநீ

அனைத்துலகில் இன் பமுநீ.

வானோர்க்குத் தாதையுநீ

வந்தோர்க்குஙத தந்தையுநீ ஏனோர்க்குத் தலைவனுநீ எவ்வுயிர்க்கும் இறைவனுநீ.

ஊழிநீ, உலகும்நீ

உருவும்நீ, அருவும்நீ

ஆழிநீ, அமுதமும்நீ

அறமும்நீ, மறமும்நீ.

எனவாங்கு

சுரிதகம்

ஒருபெருங் கடவுணிற் பரவுது மெங்கோன்

மல்லை வேந்தன் மயிலை காவலன் பல்லவர் தோன்றல் பைந்தார் நந்தி வடவரை யளவுந் தென்பொதி யளவும் விடையுடன் மங்கல விசயமும் நடப்ப ஒருபெருந் தனிக்குடை நீழல்

அரசுவீற் றிருக்க வருளுக எனவே.

1

குறிப்பு இந்தக் கடவுள் வாழ்த்துச் செய்யுளில் நந்திவர்ம னுடைய சிறப்புப் பெயராகிய அவனிநாரணன் என்னும் பெயர் கூறப் படுகிறது. மாமல்லபுரம், மயிலாப்பூர் என்னும் அவனுடைய நகரங் களும் கூறப்படுகின்றன. விடை (எருது)க் கொடியும், முத்திரையும்

குறிக்கப்படுகின்றன.